பக்கம் எண் :

 அங்கதன் தூதுப் படலம் 611

சீதையைப் பெற்றேன்; உன்னைச் சிறுவனுமாகப் 

பெற்றேன்;

ஏது எனக்கு அரியது?' என்றான்--இறுதியின்

எல்லை கண்டான்.

 

இறுதியின்  எல்லை கண்டான்-வாழ்வின் இறுதி எல்லையைக்
கண்டு கொண்டிருப்பவனாகிய  இராவணன், (அங்கதனைப் பார்த்து);
தாதையைக்    கொன்றான்   பின்னே
- உன் தந்தை வாலியைக்
கொன்ற இராமன் பின்னால்;   இருகை தலைசுமந்துநாற்றி - இரு
கரங்களையும் தலைமேல் குவித்துக்கொண்டு   (தலை)   கவிழ்ந்து;
பேதையன் என்ன
  - (மானமற்ற)   அறிவிலி  என்று (கண்டோர்
நகைக்குமாறு); வாழ்ந்தாய் என்பதோர்  பிழையும் தீர்ந்தாய் -
வாழ்கின்றாய் என்கின்ற உன் பழி  (என்னிடம்  வந்ததால்)   தீரப்
பெறுவாய்; சீதையைப்  பெற்றேன் -  (நீ  என்னை அடைந்தால்)
சீதையை நான்   அடைந்துவிட்டவனும்   ஆவேன்;   உன்னைச்
சிறுவனும் ஆகப்
  பெற்றேன்  - உன்னை என் புதல்வனாகவும்
பெற்றுக் கொண்டவன் ஆவேன்; எது எனக்கு அரியது?-எனக்கு
இனி அரிய செயல்கள் என்று (உலகில் சில) உண்டோ? என்றான். 
 

(26)
 

7000.

'அந் நரர் இன்று, நாளை, அழிவதற்கு ஐயம் 

இல்லை;

உன் அரசு உனக்குத் தந்தேன்; ஆளுதி, ஊழி  

காலம்;

பொன் அரி சுமந்த பீடத்து, இமையவர் போற்றி  

செய்ய,

மன்னவன் ஆக, யானே சூட்டுவென், மகுடம்'

என்றான்.

 

அந்நரர் - "அந்த   மனிதர்கள்"இன்று நாளை- இன்றோ
நாளையோ;   அழிவதற்கு   ஐயம் இல்லை- இறந்தொழிந்து
போவதற்குச் (சிறிதும்)    ஐயமே     இல்லை;   உன் அரசு-
(பிறனுக்குத் தரப்பட்டுள்ள)  உன்னுடைய அரசப் பொறுப்பினை;
உனக்குத் தந்தேன்
-(நான்) உனக்கு (இன்று) தந்து விட்டேன்;
ஊழிக்காலம்     ஆளுதி
-  யுக முடிவுக்காலம் வரையிலும்
அதனை    ஆளுவாயாக;   அரி  சுமந்த   பொன்பீடத்து-
சிங்கங்கள்  சுமக்கும் பொன் ஆசனத்து; தேவர்கள் போற்றி
செய்ய
- தேவர்கள் போற்றிப் புகழ்ந்து