வணங்குமாறு; மன்னவன் ஆதி- நீ வானர அரசன் ஆவாயாக; யானேமகுடம் சூட்டுவென்-நானே (என் கரங்களால்) உனக்கு மணிமுடி சூட்டி வைப்பேன் என்றான். |
இப்பாடலில் அங்கதனுக்கு ஆசையூட்டும் இராவணனின் திறம் காண்க. யானே-ஏகாரம் பிரிநிலை. தந்தேன்-துணிவு பற்றி வந்த காலவழுவமைதி. |
(27) |
| 7001. | அங்கதன் அதனைக் கேளா, அங்கையோடு அங்கை |
| தாக்கி, |
| துங்க வன் தோளும் மார்பும் இலங்கையும் துளங்க, |
| நக்கான்; |
| ' "இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே" என்பது |
| உன்னி, |
| உங்கள்பால்நின்றும் எம்பால் போந்தனன், உம்பி' |
| என்றான். |
| |
அங்கதன் அதனைக்கேளா- அங்கதன் இராவணனின் அந்த வார்த்தைகளைக் கேட்டு; அங்கையொடு அங்கைதாக்கி-அழகிய தன் கையோடு கையை அடித்து; துங்கவன் தோளும் மார்பும் - தன் தூய தோள்களும் மார்பும்; இலங்கையும் துளங்க நக்கான் - இலங்கை மாநகரும் குலுங்குமாறு (பேரொலியிட்டுச்) சிரித்து; இங்கு நின்றார்கட்கு எல்லாம்- இந்த இலங்கை நகரில் வாழும் அனைவர்க்கும்; இறுதியே என்பது உன்னி- இறுதி அழிவு உறுதி என்பதை நினைத்துத்தானே; உங்கள் பால் நின்றும்- உங்களிடத்திலிருந்து விலகி; உம்பி - உன் தம்பி வீடணன்; எம்பால் போந்தனன் - எங்கள் பக்கம் வந்தடைந்தான் என்றான். |
அங்கையொடு அங்கை தாக்கல்-எள்ளலின் வெளிப்பாடு. தோளும் மார்பும் குலுங்கச் சிரித்தான் என்பது இயல்பு. ஆயின் இலங்கையும் குலுங்கச் சிரித்தான் என்பது கம்ப முத்திரை. அங்கதன் சிரித்தான்; இலங்கை நடுங்கியது என்பது குறிப்பு. |
(28) |
| 7002. | 'வாய் தரத்தக்க சொல்லி, என்னை உன் |
| வசஞ்செய்வாயேல், |
| ஆய்தரத் தக்கது அன்றோ, தூது வந்து அரசது |
| ஆள்கை? |