| நீ தரக் கொள்வென் யானே? இதற்கு இனி நிகர் |
| வேறு எண்ணின், |
| நாய் தரக் கொள்ளும் சீயம், நல் அரசு!' என்று |
| நக்கான். |
| |
வாய்தரத்தக்க சொல்லி - வாயில் வந்த சொற்களைக் கூறி; என்னை உன் வசம் செய்வாயேல் - என்னை நீ உன் வயப்படுத்துவதற்கு முனைந்தால்; தூது வந்து அரசு அது ஆள்கை- தூதனாக வந்தவன் அரசினை ஆட்சி செய்வது; ஆய்தரத்தக்கது அன்றோ? - (இதுவரை நடந்துள்ளதா என) ஆராயத்தக்கதோர் அரிய செயல் அன்றோ? நீ தர யானே கொள்வேன்? - (வானர ஆட்சியை) நீ தர நானா ஏற்பேன்? இதற்கு- இச்செயலுக்கு; இனி நிகர் வேறு எண்ணில் - இனி வேறோர் ஒப்புக் கூற எண்ணினால்; நாய் தர - (ஒரு) நாயானது கொடுக்க; நல் அரசு சீயம் கொள்ளும் - ஒரு நல்ல அரசைச் சிங்கம் ஏற்றுக் கொள்வதை ஒக்கும்; என்று நக்கான்- என்று சிரித்தான் (அங்கதன்) |
(29) |
| 7003. | 'அடுவெனே' என்னப் பொங்கி ஓங்கிய அரக்கன், |
| 'அந்தோ! |
| தொடுவெனே, குரங்கைச் சீறிச் சுடர்ப் படை?' |
| என்று, தோன்றா |
| நடுவனே செய்யத்தக்க நாள் உலந்தார்க்குத் தூத! |
| படுவதே துணிந்தாய்ஆகில், வந்தது பகர்தி' |
| என்றான். |
| |
அடுவனே என்னப் பொங்கி- (இவனைக்) கொல்லவே போகிறேன் என்று வெகுண்டு; ஓங்கிய அரக்கன் - எழுந்த இராவணன்; அந்தோ!- ஐயோ! குரங்கைச் சீறி சுடர்ப்படை தொடுவெனே - (ஓர் அற்பக்) குரங்கின் மேல் கோபித்து வாளைத் தீண்டுவேனோ; என்று- என்றெண்ணி; தோன்றா நடுவனே செய்யத்தக்க- கட்புலனாகாத இயமனே இறுதி செய்யக்கூடிய; நாள் உலந்தோர்க்குத் தூத! - வாழ்நாள் முடிவெய்தியவர்கட்குத் தூதனாக வந்தவனே! படுவதே துணிந்தாய்ஆகில்- (அந்த இராம இலக்குவர்களோடு) நீயும் அழிவது என்று முடிவு செய்து விட்டாயாகில்; வந்தது பகர்தி என்றான் - நீ வந்த காரியத்தை உரைப்பாயாக என்றான் (இராவணன்) |
(30) |