பக்கம் எண் :

630யுத்த காண்டம் 

மாமுரசு   அறைந்த- (வானரச்    செயல் இவ்வாறாக)
(இலங்கையில்) பெரிய முரசங்கள் முழக்கப்பெற்றன; ஆனைப்
பதாகையால் -   யானைகளின்  மீது  விளங்கிய    பெரிய
கொடிகளால்;  நெடுவான்   அகம்    மறைந்த -  நீண்ட
விண்ணிடங்கள் மறைந்தன; தூளி குழுமி - தூசுகள்  திரண்டு;
மாதிரம் குறைந்த- திக்குள்   சுருங்கினவாகத்   தோன்றின;
ஆங்கு- அங்கே; அவர் போர்க்குப் எழும் ஓதை- அந்த
அரக்கர்கள் போருக்குப் புறப்படும் ஓசையானது; விண்ணூடு
புக்கு உறைந்தது
- ஆகாயத்தில் சென்று நிலைபெற்றது. 
  

(16)
 

7033.

கோடு அலம்பின; கோதை அலம்பின;

ஆடல் அம் பரித் தாரும் அலம்பின; 

மாடு அலம்பின, மா மணித் தேர்; மணி 

பாடு அலம்பின, பாய் மத யானையே. 

 

கோடு அலம்பின- சங்கங்கள் முழங்கின;  கோதை 
அலம்பின
-(அரக்கர்கள் மார்பில் அணிந்திருந்த) ஆரங்கள் 
ஒலித்தன; ஆடல் அம்பரித் தாரும் அலம்பின- (போர் 
முரசு கொம்பு முதலியவற்றின் ஒலிக்கேற்ப) ஆடிச்செல்லும் 
அழகிய குதிரைகளின்   கிண்கிணி மாலைகளும் ஒலித்தன; 
மாமணித் தேர் மணிமாடு அலம்பின
- பெரிய  அழகிய 
தேர்களில் கட்டப்பட்டுள்ள மணிகள் பக்கங்களில் ஒலித்தன;
பாய்மத  யானை  பாடு   அலம்பின-   பெருகுகின்ற
மதத்தினையுடைய  யானைகள்  (போர்  கிடைத்தது  என்ற
மகிழ்ச்சியால்) பிளிறின.
 

(17)
 

வானர சேனையும் அரக்கர் சேனையும் பொருதல்
 

7034.

அரக்கர் தொல் குலம் வேர்அற, அல்லவர்

வருக்கம் யாவையும் வாழ்வுற, வந்தது ஓர் 

கருக் கொள் காலம் விதிகொடு காட்டிட, 

தருக்கி உற்று, எதிர் தாக்கின-தானையே. 

 

அரக்கர்  தொல்குலம்   வேர் அற- அரக்கர்களின் 
தொன்மை வாய்ந்த குலம் வேரொடு அழியுமாறும்; அல்லவர்
- அரக்கர்  அல்லாத  தேவர்,  மானிடர் முதலியோருடைய; 
வருக்கம் யாவையும் வாழ்வுற
-  இனம் எல்லாம்  வாழ்வு 
பெறுமாறும்; வந்தது ஓர்  கருக்கொள்  காலம்  கொடு
விதி காட்டி வந்ததாகிய ஒரு