காரணத்தைத் தன்னுள்ளே பொதிந்து வந்த காலத்தை; விதி காட்டிட- ஊழ்வினை காட்டியதால்; தானை - வானர சேனை அரக்கர் சேனையும்; தருக்கி உற்று எதிர்தாக்கின- பெருஞ் செருக்கோடு நெருங்கி எதிர் எதிராக (ஒன்றையொன்று) தாக்கிக் கொண்டன. |
(18) |
| 7035. | பல் கொடும், நெடும் பாதவம் பற்றியும், |
| கல் கொடும், சென்றது-அக் கவியின் கடல். |
| வில் கொடும், நெடு வேல்கொடும், வேறு உள |
| எல் கொடும் படையும் கொண்டது--இக் கடல். |
| |
அக்கவியின் கடல்- அந்தக் கடல் போன்ற வானரச் சேனையானது; பல்கொடும் - பற்களைக்கொண்டும்; நெடும் பாதவம் பற்றியும் - பெரிய மரங்களைக் கொண்டும்; கல் கொடும் - கற்களைக் கொண்டும்; சென்றது- (எதிர்க்கச்) சென்றது; இக்கடல்- இந்தக் கடல் போன்ற அரக்கர் சேனையோ; வில் கொடும் - விற்களைக் கொண்டும்; நெடுவேல் கொடும்- நீண்ட வேல்களைக் கொண்டும்; வேறு உள எல்கொடும் படையும் கொண்டது-மற்றும் உள்ள ஒளி மிக்க படைக்கருவிகளையும் கொண்டு சென்றது. |
(19) |
| 7036. | அம்பு கற்களை அள்ளின; அம்பு எலாம் |
| கொம்புடைப் பணை கூறு உற நூறின; |
| வம்புடைத் தட மா மரம் மாண்டன, |
| செம் புகர்ச் சுடர் வேல்-கணம் செல்லவே. |
| |
அம்பு கற்களை அள்ளின - அரக்கர் விட்ட அம்புகள் (வானர வீரர்கள் வீசிய) குன்றுகளைத் தூளாக்கின; அம்பு எலாம் - அந்த அம்புகளையெல்லாம்; கொம்புடைப்பணை- (வானரர வீசிய) கொம்புகளோடு கூடிய மரங்களின் கிளைகள்; கூறு உற நூறின- துண்டாகும்படி பொடியாக்கின; செம்புகர்- (உதிரம் தோய்தலால்) செந்நிறப் புள்ளிகள் தோன்றும்படி; சுடர் வேல்கணம் செல்ல - ஒளிர்கின்ற வேலின் தொகைகள் பாய்தலால்; வம்பு உடைத்தட மாமரம் - மணமுடைய மிகர் பெரிய மரங்கள்; மாண்டன - அழிந்து வீழ்ந்தன. |