அள்ளுதல்-கைப்பற்றுதல்; இங்கு அழித்தலைக் குறித்தது. கொம்பு - சிறுகிளை. பணை - பெருங்கிளை. ஆகுபெயரால் மரத்தைக் குறித்தது எனினுமாம். |
(20) |
| 7037. | மாக் கை வானர வீரர் மலைந்த கல் |
| தாக்கி, வஞ்சர் தலைகள் தகர்த்தலால், |
| நாக்கினூடும், செவியினும், நாகம் வாழ் |
| மூக்கினூடும், சொரிந்தன, மூளையே. |
| |
மாக்கை வீரர்- பெரிய கைகளையுடைய வானர வீரர்கள்; மலைந்த கல் - போரில் வீசிய கற்கள்; தாக்கி - மோதி; வஞ்சர் தலைகள் தகர்த்தலால்- வஞ்சகராம் அரக்கர்களின் தலைகளைப் பிளப்பதால்; நாக்கின் ஊடும் - அந்த அரக்கர்களின் வாய் வழியாகவும்; செவியினும் - காது வழியாகவும்; நாகம்வாழ் மூக்கின் ஊடும் - நாகப்பாம்புகள் வசிக்கின்ற மூக்கு வழியாகவும்; மூளை சொரிந்தன- (அவர்கள்) மூளைகள் வெளிப்பட்டன. |
வானரவீரர்களின் கரங்கள் மலைகளைப் பெயர்க்கவும் ஏந்தவும் வல்ல வலிமை வாய்ந்தனவாதலின் "மாக்கை" என்றார். நாக்கு ஆகுபெயராய் வாயைக் குறித்தது. நாக்கும், மூக்கும், வாயும் தலையில் தொளைகள் உள்ள உறுப்புகளாதலின், அத்தொளைகள் வழியே அழுத்தப் பெற்ற மூளைகள் வெளிவந்தன. |
(21) |
| 7038. | அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்தம் |
| விற்கள் ஓடு சரம் பட, வெம் புணீர் |
| பற்களோடும் சொரிதர, பற்றிய |
| கற்களோடும் உருண்ட, கவிகளே. |
| |
அற்கள் ஓடும் நிறத்த அரக்கர்தம் - இருளும் (அஞ்சி) ஓடவல்ல (கருமை) நிறம் உடைய அரக்கர்களுடைய;விற்கள்- விற்களிலிருந்து; ஓடுசரம் பட- விரைந்து வருகின்ற அம்புகள் பட்டதனால்; வெம்புண்நீர் - கொதிக்கின்ற புண்களிலிருந்து சொட்டும் உதிரம்; பற்களோடும் சொரிதர- பற்களோடும் வெளியே விழ; பற்றிய கற்களோடும் - (அரக்கர் மேல் வீசக் கொண்டு வந்த கரங்களில்) கற்களைப் பிடித்தவாறு; கவிகள் உருண்ட- குரங்குகள் (களத்தில்) (வீழ்ந்து) உருண்டன. |
(22) |
| 7039. | நின்று மேரு நெடு மதில் நெற்றியின் |
| வென்றி வானர வீரர் விசைத்த கல் |