பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 633

சென்று, தீயவர் ஆர் உயிர் சிந்தின,

குன்றின் வீழும் உருமின் குழுவினே. 

 

மேரு  நெடுமதில்  நெற்றியின் - மேருமலை போன்று 
உயர்ந்த மதிலின் உச்சியில்; நின்று- நின்று கொண்டு; வென்றி
வானர  வீரர் -  வெற்றி   மிகுகின்ற   வானர    வீரர்கள்;
விசைத்தகல் - வேகத்துடன் வீசிய கற்கள்; குன்றின் வீழும்
உருமின்  குழுவின் -  மலை மேல்  விழுகின்ற    இடியின் 
கூட்டங்கள்  போல;  சென்று- போய் ; தீயவர் ஆர் உயிர
சிந்தின
- கொடியவர்களாகிய அரக்கர்களின் அரிய உயிரைப் 
பறித்துச் சென்றன. 
 

(23)
 

7040.

எதிர்த்த வானரம் மாக் கையொடு இற்றன; 

மதில் புறங் கண்டு, மண்ணில் மறைந்தன;- 

கதிர்க் கொடுங் கண் அரக்கர் கரங்களால் 

விதிர்த்து எறிந்த விளங்கு இலை வேலினே. 

 

கதிர் கொடு கண் அரக்கர் கரங்களால் - (வெகுளியில்)
ஒளியுடைய  கண்களைக்கொண்ட  அரக்கருடைய    கைகளால்;
விதிர்த்து  எறிந்த விளங்கு இலை வேலின்- அசைத்து வீசிய
ஒளிர்கின்ற  இலை  வடிவான வேல்களால்; எதிர்த்த வானரம் -
எதிர்த்துப் போரிட்ட வானரங்கள்; மாக்கையோடு   இற்றன -
பெரிய  கரங்கள்  அறுபட்டு  மடிந்தனவாகி; மதில்புறம் கண்டு
மண்ணில் மறைந்தன - மதிலுக்கு வெளிப்புறத்தில் மண்ணிலே
(வீழ்ந்து) மறைந்தன.
 

(24)
 

7041.

கடித்த, குத்தின, கையின் கழுத்து அறப்

பிடித்த, வள் உகிரால் பிளவு ஆக்கின, 

இடித்த, எற்றின, எண் இல் அரக்கரை 

முடித்த-வானரம், வெஞ் சினம் முற்றின. 

 

வானரம்  - குரங்குகள்;    வெம்சினம்     முற்றின-
கொடுங்கோபம்    மிக்கனவாய்;     கடித்த-     (பற்களால்
அரக்கரைக்) கடித்தன; கையில் குத்தின- கைகளால் குத்தின;
கழுத்து  அறப்பிடித்த - அரக்கர் கழுத்துகள் துண்டாம்படி
இறுக்கின;   வள்   உதிரால்   பிளவு  ஆக்கின - கூரிய 
நகங்களால் இருபிளவாகப் பிளந்தன;  இடித்த- முட்டிகளால் 
தாக்கின; எற்றின - கால்களால் உதைத்தன;