எண்ணில் அரக்கரை முடிக்க-எண்ணற்ற அரக்கர்களை (இவ்வாறாக) அழித்தன. |
வினைகளை அடுக்கும் திறத்தால், கம்பர் களக்காட்சியைக் கண்முன் நிறுத்துகிறார். |
(25) |
| 7042. | எறிந்தும், எய்தும், எழு முளைத் தண்டு கொண்டு |
| அறைந்தும், வெவ் அயில் ஆகத்து அழுத்தியும், |
| நிறைந்த வெங் கண் அரக்கர் நெருக்கலால், |
| குறைந்த--வானர வீரர் குழுக்களே. |
| |
வெம்கண் நிறைந்த அரக்கர்- கொடுமை நிறைந்த கண்களையுடைய அரக்கர்கள்; எறிந்தும் - (பல படைக்கருவிகளை) வீசியும்; எய்தும்- (அம்புகளை) ஏவியும்; எழு- இரும்புத் தூண் போன்ற; முளை தண்டு கொண்டு அறைந்தும்- மூங்கில் கோல்களைக் கொண்டு அடித்தும்; வெம் அயில் ஆகத்து அழுத்தியும் - கடுமையான வேல்களை உடலில் புதையுமாறு அழுத்தியும்; நெருக்கலால்- நெருக்கியதனால்; வானர வீரர் குழுக்கள் குறைந்த- குரங்கு வீரர்கள் கூட்டம் அளவில் குறைந்து போயிற்று. |
எழு-இரும்புத்தூண்:முளை-மூங்கில்."முளைவாய் எயிற்ற முள் உகிர் ஞமலி" (குறிஞ்சிப் : 131) எனுமிடத்து, முளை-மூங்கில் எனும் பொருளில் வந்தமை காணலாம். "நிறைந்த வெங்கண் அரக்கர், குறைந்த வானர வீரர்" என்பதில் அடிமுரணும் சொல் நயமும் தோன்றுதல் காண்க. |
(26) |
| 7043. | செப்பின் செம் புனல் தோய்ந்த செம் பொன் மதில், |
| துப்பின் செய்தது, போன்றது, சூழ் வரை; |
| குப்புற்று ஈர் பிணக் குன்று சுமந்துகொண்டு |
| உப்பின் சென்றது, உதிரத்து ஒழுக்கமே. |
| |
செப்பில் செம்புனல் தோய்ந்த செம்பொன்மதில்- செம்பை உருக்கிய ஒழுக்கினைப்போல, இரத்தம் தோய்ந்த செம்பொன்னால் ஆன (இலங்கை) மதிலானது; சூழ் வரை- சுற்றி நின்ற ஒரு மலை; துப்பில் செய்தது போன்றது- செம்பவழத்தால் ஆக்கியது போலத் தோற்றம் அளித்தது; உதிரத்து ஒழுக்கம்- இரத்தப் பெருக்கம்; குப்புற்று பிணக்குன்று ஈர் - தலைகீழாக வீழ்ந்த |