பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 635

பிண  மலைகளை இழுத்து; சுமந்து கொண்டு- தாங்கிக் 
கொண்டு ; உப்பில் சென்றது- உப்புக்கடலை நோக்கிப் 
பாய்ந்து சென்றது.
 

மதில்   இரத்தம்     தோய்ந்து     கிடந்தமையால்,
செம்பவழத்தால்  ஆன  மலை போன்று  காட்சியளித்தது.
பிணங்களைத்  தோளில்   சுமந்துகொண்டு  செல்கையில்,
தலைகுப்புற  வீழ்ந்து  கிடப்பது  இயல்பு.  இரத்த ஆறு,
பிணங்களைத் தலைகீழாக்கிக் கடலை நோக்கி  இழுத்துச்
சென்றது. உப்பு-ஆகு பெயராய் கடலைக் குறித்தது.
 

(27)
 

7044.

வந்து இரைத்த பறவை மயங்கின, 

அந்தரத்தில் நெருங்கலின், அங்கு ஒரு 

பந்தர் பெற்றது போன்றது--பற்றுதல் 

இந்திரற்கும் அரிய இலங்கையே. 

 

இந்திரற்கும் பற்றுதல் அரிய  இலங்கை- (தேவர் 
தலைவனான)  இந்திரனாலும் கைப்பற்றிக்  கொள்ளுதற்கு 
அரியதான  இலங்கை  மாநகரானது;  வந்து   இரைத்த 
மயங்கின    பறவை
-  அங்கு  பிணம்  தின்ன  வந்து 
கூச்சலிட்ட     பறவைகளின்     பல்வகைக்  கூட்டம்;
அந்தரத்தின்       நெருங்கலின் -     ஆகாயத்தில்
(இடைவெளியின்றி) நெருங்கியதால்; அங்கு ஒரு   பந்தர்
பெற்றது போன்றது-  அவ்விடத்தின் மேலே     பந்தல்
(வேய்ந்து) இட்டாற்போன்று காட்சி தந்தது.
 

போர்க்களக்காட்சியைத் தேவர்கள் காண இயலாதவாறு,
பறவைகள்  பந்தலிட்டு  மறைத்தன என்பது ஒரு குறிப்பாம்.
"மயங்கின  பறவை"   என்பது,  பல்வகையான    பறவைக் 
கூட்டத்தைக் குறித்து நின்றது.தேவரும் வாய்திறக்க அஞ்சும் 
இலங்கையில்     பறவைகளும்   கூச்சலிடும்   துணிவைப் 
பெற்றனவே! என வியந்தவாறு.
 

(28)
 

7045.

தங்கு வெங் கனல் ஒத்துத் தயங்கிய 

பொங்கு வெங் குருதிப் புனற் செக்கர்முன், 

கங்குல் அன்ன கவந்தமும் கையெடுத்து, 

அங்கும் இங்கும் நின்று, ஆடினவாம்அரோ. 

 

தங்கு   வெங்கனல்    ஒத்து- குவிந்து கிடக்கின்ற 
கொடுந்தணல் போன்று; தயங்கிய -  ஒளிர்கின்ற; பொங்கு 
வெங்குருதிப் புனல்
- பொங்குகின்ற கொடிய உதிர நீராகிய; 
செக்கர்முன்
- சிவந்த அந்தி வானத்தின் முன்னால்;கங்குல் 
அன்ன கவந்தமும்
- இரவு வந்தாற் போன்ற (அரக்கர்களின்)
தலையற்ற உடல்களும்; கை எடுத்து-