பக்கம் எண் :

636யுத்த காண்டம் 

கைகளை   உயர்த்தியவாறு; அங்கும்  இங்கும்  நின்று 
ஆடின
- அங்கும் இங்குமாக நின்று ஆடல் நிகழ்த்தின.
 

(29)
 

7046.

கொன் நிறக் குருதிக் குடை புட்களின் 

தொல் நிறச் சிறையில் துளி தூவலால், 

பல் நிறத்த பதாகைப் பரப்பு எலாம் 

செந் நிறத்தனவாய், நிறம் தீர்ந்தவே. 

 

கொன்நிறக் குருதி- அச்சந் தருகின்ற செந்நிறமுள்ள
இரத்தத்திலே; குடைபுட்களின்- மூழ்குகின்ற  பறவைகளின்;
தொல்  நிறச்  சிறையில்   துளிதூவலால் -    பழைய 
இறகுகளில் படிந்த (குருதித்) துளிகள் சிந்துவதால்;பல்நிறத்த
பதாகைப்   பரப்பு   எலாம்
- பல நிறங்களைக் கொண்ட 
பெருங்கொடிகளின் கூட்டம் எல்லாம்;  செந்நிறத்தனவாய் 
நிறம் தீர்ந்த
  -  செந்நிறமாக  மாறிப்  பழைய     நிறம்
மாறிவிட்டன.
 

(30)
 

வானரங்கள் மதிலிலிருந்து இரங்குதலும் அரக்கர் நிரம்புதலும்
  

7047.

பொழிந்த சோரிப் புதுப் புனல் பொங்கி மீ

வழிந்த மா மதில் கைவிட்டு, வானரம், 

ஒழிந்த, மேருவின் உம்பர்விட்டு இம்பரின் 

இழிந்த மாக் கடல் என்ன, இழிந்ததே. 

 

வானரம்- குரங்குகள்; ஒழிந்த- வலிமை குறைந்தனவாய்;
பொழிந்த சோரிப் புதுப்புனல்- சொரிந்த உதிரம் என்னும்
புது வெள்ளம் பொங்கி; மீவழிந்த  மாமதில் கைவிட்டு -
மேலே வழியப் பெற்ற பெரிய மதிலினைக் கைவிட்டு  விட்டு;
மேருவின் உம்பர் விட்டு இம்பரின் இழிந்த-மேருகிரியின்
மேலிடத்தை  விட்டு அகன்று  மற்றொரு பக்கத்தில் இறங்கிய;
மாகடல்  என்ன  இழிந்த-  பெரிய கடலே போன்று கீழே
இறங்கின.
 

(31)
 

7048.

பதனமும், மதிலும், படை நாஞ்சிலும்,

கதன வாயிலும், கட்டும் அட்டாலையும், 

முதல யாவையும் புக்குற்று முற்றின- 

விதன வெங் கண் இராக்கதர் வெள்ளமே.