பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 637

விதன வெங்கண் இராக்கதர் வெள்ளம்- துயரம் 
புரியவல்ல   கொடிய   கண்களையுடைய    இராக்கதர் 
பெருங்கூட்டத் தொகுதிகள்; பதனமும் - மதிலில் உள்ள 
மேடைகளிலும்;மதிலும்-மதில்களிலும்; படை நான்கிலும் 
- அம்புகள் விடுதற்குரிய (ஏவறை) முடுக்குகளிலும்; கதன 
வாயிலும்
- (பகைவர்) கலங்குதற்குரிய கோபுர வாயிலிலும்; 
கட்டும்   அட்டாலையும்
-  மதில் மேல் கட்டப்பட்ட 
மண்டபங்களிலும்;  முதலயாவையும் - (இவை) முதலான 
எல்லா இடங்களிலும்; புக்குற்று முற்றின-புகுந்து நிரம்பின.
 

பதணம் - மதில்களின் உள் உள்ள மேடை  "நெடுமதில் 
நிறைப் பதணத்து" (பதிற்றுப். 22-25) என்பதனால்  இச்சொல் 
பதணம் எனவும் வழங்கும் எனத் தெரிகிறது. நாஞ்சில்- மதில்
உறுப்புக்களுள் ஒன்று.. அம்பு ஏவும் துளைகள் உள்ள  இடம்.
ஞாயில் எனவும் வழங்கும். அட்டாலை-கோட்டை மதில் மேல்
கட்டப்படும் மண்டபம். அரக்கர் மட்டுமே அன்றிக் கோட்டை
வாயிலும்  கலக்கம்  செய்யும்  என்பார்.  "கதன   வாயிலும்"
என்றார். "கோட்டைக்கு அரணாகப் போடப்பட்ட உட்படிகள்"
என்பது பழைய உரை.
 

(32)
 

7049.

பாய்ந்த சோரிப் பரவையில் பற்பல 

நீந்தி ஏகும், நெருக்கிடைச் செல்வன; 

சாய்ந்து சாய்ந்து, சரம் படத் தள்ளலுற்று 

ஓய்ந்து வீழ்ந்த; சில சில ஓடின. 

 

நெருக்கிட-  (அரக்கர்)     நெருங்கி   வந்தமையால்; 
செல்வன
-  (வேறிடங்கட்குத் தப்பிச்) செல்கின்ற; பற்பல
பலவாய குரங்குகள்; பாய்ந்த சோரிப் பரவையில்- பாய்ந்து 
ஓடிச் செல்கின்ற  உதிரக்  கடலில்;  நீந்தி  ஏகும்- நீந்திக்
கடப்பதற்கு   முயலும்;   சிலசில -   சிற்சில  குரங்குகள்;
சாய்ந்து    சாய்ந்து  -  மிகவும்  தளர்ந்து;   சரம்பட-
(அரக்கர் விட்ட)  அம்புகள் தைத்ததனால்; தள்ளல் உற்று
ஓய்ந்து  வீழ்ந்த - உயிர் தளர்ந்து செயலிழந்து வீழ்ந்தன;
சிலசில  ஓடின - சிற்சில (உயிர்   தப்பிப்     பிழைக்க)
ஓட்டம் பிடித்தன.
 

உதிரவெள்ளத்தின்   மிகுதி   காட்ட  "சோரிப்பரவை"
என்றார்.  போரிடும்   பொருட்டு    மதில்களில்   ஏறிய
குரங்குகள்,      அரக்கர்களால்       துரத்தப்பட்டமை
கூறியவாறு.
 

(33)