தன் ஒலியை விடப் பேர் ஒலி இல்லை என்று, "ஆர்கலி" எனும் பட்டத்தைப் பெற்றுத் தருக்கியிருந்த கடல், தன் ஒலியிலும் பேரொலியுண்டு என்பதையுணர்ந்து மனக்கலக்கம் அடைந்தது என்பதாம். முருடு - பறைப்பொது எனும் பிங்கலந்தை; மத்தளமுமாம். காளம்-எக்காளம். ஊது கொம்பு. ஆகுளி - சிறு பறை. "நுண்ணீர் ஆகுளி இரட்ட" (மதுரைக்காஞ்சி. 606) தமிழகத்திலிருந்த பல்வகைப் போர்க்கருவிகளின் பெயர்கள். |
(35) |
இராவணனது படை வெளி வருதல் |
| 7052. | ஆய காலை, அனைத்து உலகும் தரும் |
| நாயகன் முகம் நாலும் நடந்தென, |
| மேய சேனை விரி கடல், விண் குலாம் |
| வாயிலூடு புறப்பட்டு வந்ததே. |
| |
ஆயகாலை- அப்பொழுதில்; உலகு அனைத்தும் தரும் - உலகம் யாவையும் படைக்கும்; நாயகன் முகம் நாலும் நடந்தென- நான்முகப் பிரமனுடைய நான்கு வாய்களிலிருந்தும் புறப்பட்டது போல; மேய சேனை- (இலங்கையில்) பொருந்திய (அரக்கர்) சேனையாகிய; விரிகடல் - பரந்த கடலானது; விண்குலாம்வாயில் ஊடு- ஆகாயம் அளாவும் (இலங்கையின்) நான்கு வாயில்களின் வழியே; புறப்பட்டு வந்தது - வெளிப்பட்டு வந்தது. |
(36) |
| 7053. | நெடிய காவதம் எட்டும் நிரம்பிய, |
| படிய வாயில் பருப்பதம் பாய்ந்தென, |
| கொடியொடும் கொடி சுற்றக் கொடுத்த தண்டு |
| ஒடிய ஊன்றின, மும் மத ஓங்கலே. |
| |
நெடிய காவதம் எட்டும் நிரம்பிய- நீண்ட எட்டுக் காதப் பரப்பும் நிறையுமாறு; மும்மத ஓங்கல்- மூன்று மதங்களையுடைய யானைகள்; படிய வாயில் - படிகளையுடைய கோட்டை வாயில்களில்; பருப்பதம் பாய்ந்தென - மலைகள் பாய்ந்து சென்றாற்போல; கொடியோடும் - (தம்மீதுள்ள) கொடிகளோடும்;கொடி சுற்றத் கொடுத்த தண்டு - பிற யானைகளின் மீதுள்ள கொடிகளோடும் (அக்கொடிகள்) சுற்றிக்கொள்ள, (அவை) கட்டியுள்ள கம்புகள்; ஓடிய ஊன்றின - ஓடியுமாறு நெருங்கி (அவற்றை) ஊன்றிக்கொண்டு வெளிவந்தன. |
(37) |