பக்கம் எண் :

640யுத்த காண்டம் 

7054.

சூழி யானை மதம் படு தொய்யலின், 

ஊழி நாள் நெடுங் கால் என ஓடுவ, 

பாழி ஆள் வயிரப் படி பல் முறை 

பூழி ஆக்கின, பொன் நெடுந் தேர்களே. 

 

பொன்  நெடுந்தேர்கள்-   பொன்னால்  ஆகிய  நீண்ட
தேர்கள்;சூழி யானை - முகபடாம் அணிந்த யானைகளினுடைய;
மதம்  படு  தொய்யலின் -  மதநீர்  பெருகுவதனால் ஆகிய
சேற்றில்;  ஊழி  நாள்  நெடுங்கால் என-  ஊழிக்காலத்திலே
வீசும்   பெருங்காற்றுப்  போல; ஓடும் - விரைந்து ஓடுவனவாய்;
பாழி ஆள்  வயிரப்படி- வன்மை பொருந்திய வயிரம் போன்ற
பூமியை; பன்முறை பூழி ஆக்கின- பலவாறாகத் துகள்படுத்தின.
 

சேறுமாய்த்   தேர்கள்   ஓடத்துகளுமாய்,  ஒன்றோடொன்று
மாறுமாறாகி,  வாளாகிடக்கிலா மறுகிற் சென்றார்" (கம்ப. 485) 
என்றார். மிதிலைக்காட்சியிலும்.
 

(38)
  

7055.

பிடித்த வானரம் பேர் எழில் தோள்களால் 

இடித்த மா மதில் ஆடை இலங்கையாள், 

மடுத்த மாக் கடல் வாவும் திரை எலாம் 

குடித்துக் கால்வன போன்ற, குதிரையே. 

 

பிடித்த வானரம் - இலங்கைக் கோட்டையைக் கைப்பற்றிய
வானரங்கள்;  பேர்  எழில்   தோள்களால்  -  (அவற்றின்)
பெருத்த   அழகிய   தோள்களால்;    இடித்த  மாமதில் -
தகர்க்கப்பட்ட உயர்ந்த மதிலாகிய; ஆடை  இலங்கையால் -
ஆடையையுடுத்த இலங்கையென்னும் மங்கை; குடித்து மடுத்த
மாக்கடல் - (இடிபட்ட மதில்களின் வழியே  உட்புகுந்ததால்)
பருகி  உட்கொண்ட  கடல்  நீரை; வாவும்  திரையெலாம்-
தாவிச் செல்லும் அலைகளாக; கால்வன  போன்ற குதிரை-
கக்குவது போன்றிருந்தன குதிரைகள்.
 

(39)
 

7056.

கேள் இல் ஞாலம், கிளத்திய தொல் முறை 

நாளும் நாளும் நடந்தன நள் இரா, 

நீளம் எய்தி, ஒரு சிறை நின்றன, 

மீளும் மாலையும் போன்றனர்--வீரரே.