கேள் இல் ஞாலம் - உவமை கூற இயலாத உலகத்தில்; தொல்முறை கிளத்திய - பழங்காலந்தொட்டு பகர்கின்ற; நாளும் நாளும் - நாள்தோறும்;நடந்தன நள் இரா- சென்றனவாகிய அடர்ந்த இரவுகள்; நீளம் எய்தி ஒரு சிறை நின்றன- (இலங்கையின் பேரொளிக் கூட்டத்திற்கு அஞ்சி) வரிசையாக ஒரு பக்கத்தில் (சிறைப்பட்டு) இருந்தவைகள்; மீளும் மாலையும் போன்றனர் வீரர்- (சிறை வீடு பெற்று) மீண்டு வெளியே புறப்பட்டு வருவது போன்று அரக்க வீரர்களாகிய காலாட்படையினர் வெளி வந்தனர். |
கேழ்-ஒப்பு. எதுகை நோக்கி, "கேள்" என வந்தது. |
(40) |
| 7057. | பத்தி வன் தலைப் பாம்பின் பரம் கெட, |
| முத்தி நாட்டின் முகட்டினை முற்றுற, |
| பித்தி பிற்பட, வன் திசை பேர்வுற, |
| தொத்தி, மீண்டிலவால்--நெடுந் தூளியே. |
| |
நெடுந்தூளி - (இவ்வாறு) நால்வகைப் படைகளாலும் எழுப்பப்பட்ட) பெரும் புழுதியானது; பத்தி - வரிசையாக; வன்தலைப் பாம்பின் - வலிய தலைகளைக் கொண்ட ஆதிசேடனுடைய ; பரம்கெட - பாரம் கெடுமாறு; முத்தி நாட்டின் முகட்டினை- வான நாட்டின் முகட்டினை; முற்றுற- முழுவதும் வளைத்துக் கொள்ளுமாறும்; பித்திபின்பட- அண்டச்சுவர் பின் ஆகுமாறும்; வன்திசை பேர்வுற- வலிய திசைகள் பெயருமாறும்; தொத்தி மீண்டில- ஒட்டிக்கொண்டு மீளாதன ஆயின. |
(41) |
வானரச் சேனை நிலைகுலைய, சுக்கிரீவன் சினந்து பொருதல் |
| 7058. | நெருக்கி வந்து நிருதர் நெருங்கலால், |
| குரக்குஇனப் பெருந் தானை குலைந்து போய், |
| அருக்கன் மா மகன், ஆர் அமர் ஆசையால் |
| செருக்கி நின்றவன், நின்றுழிச் சென்றவால். |
| |
நெருக்கி வந்து- (தம்மை) நெருக்கிக் கொண்டு வந்து; நிருதர் நெருங்கலால் - அரக்கர்கள் நெருங்குவதனால்; குரக்கினப் பெருந்தானை - வானரக் கூட்டத்தின் பெரும் படைகள்; குலைந்து போய்- நிலை குலைந்து போய்; ஆர் அமர் ஆசையால் - போர் செய்யவேண்டும் என்னும் பேராசையுடன்; செருக்கி நின்றவன் - பெருமிதத்தோடு நிற்கின்றவனான; அருக்கன் மாமகன் - சூரியன் |