புதல்வன் சுக்கிரீவன்; நின்றுழிச் சென்ற - நிற்கும் இடத்தை நோக்கிச் சென்றன. |
(42) |
| 7059. | சாய்ந்த தானைத் தளர்வும், சலத்து எதிர் |
| பாய்ந்த தானைப் பெருமையும், பார்த்து, உறக் |
| காய்ந்த நெஞ்சன், கனல் சொரி கண்ணினன், |
| ஏய்ந்தது அங்கு ஓர் மராமரம் ஏந்தினான். |
| |
சாய்ந்த தானைத் தளர்வும் - வலிமை குறைந்த வானரப் படையினுடைய தளர்ச்சியையும்; சலத்து எதிர்பாய்ந்த தானைப் பெருமையும்-வெகுளியோடு எதிரே தாவி வருகிற அரக்கர் படையின் சிறப்பையும்; பார்த்து-கண்டு;உறக்காய்ந்த- மிகவும் கொதிப்புற்ற; நெஞ்சன்-நெஞ்சையுடையவனும்; கனல் சொரி கண்ணினன்-நெருப்புச் சிந்துகின்ற கண்களையுடையவனு மாகி; அங்கு ஏய்ந்தது- அவ்விடத்தில் கிடைத்த; ஓர் மராமரம் ஏந்தினான் - ஒரு மராமரத்தை தூக்கினான் (சுக்கீரிவன்). |
(43) |
| 7060. | வாரணத்து எதிர், வாசியின் நேர், வயத் |
| தேர் முகத்தினில், சேவகர்மேல், செறுத்து, |
| ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின் உற்று, உயர் |
| தோரணத்து ஒருவன் எனத் தோன்றினான். |
| |
வாரணத்து - யானை மேலும்; வாசியின் - குதிரை மீதும்; வயத் தேர் முகத்தினில் - வலிமை மிக்க தேரின் முன்பும்; சேவகர்மேல் - அரக்க வீரர் மீதும்; செறுத்து - வெகுண்டு; ஓர் ஒருத்தர்க்கு ஒருவரின்-ஒவ்வொருத்தனுக்கு முன்னாலும்; உற்று - ஒவ்வொரு சுக்கிரீவன் நிற்பதைப்போல; உயர் தோரணத்து- உயர்ந்த தோரண வாயிலிலே; எதிர்நேர் ஒருவன் என- எதிர் நின்று (அரக்கருடன்) போரிட்ட ஒப்பற்றவனான அனுமனைப் போல; தோன்றினான் - தோற்றமளித்தான் சுக்கிரீவன். |
(44) |
| 7061. | களிறும், மாவும், நிருதரும், கால் அற, |
| ஒளிறு மா மணித் தேரும் உருட்டி, வெங் |
| குளிறு சோரி ஒழுக, கொதித்து, இடை |
| வெளிறு இலா மரமே கொண்டு, வீசினான். |