களிறும் மாவும் நிருதரும் கால் அற- யானைகளும் குதிரைகளும் அரக்க வீரர்களும் கால் ஒடிந்து வீழுமாறும்; ஒளிறும் மாமணித் தேரும் உருட்டி- ஒளிர்கின்ற பெரிய மாணிக்கத் தேர்களைக் கவிழுமாறும்; வெம்குளிறு சோரி ஒழுக- வெப்பமுடையதாய் ஒலித்துக் கொண்டு உதிரம் ஆறாய்ப் பெருக்கெடுக்குமாறும்; கொதித்து - மனத்தில் வெம்மையோடு; இடை- நடுவில்; வெளிறு இலா- வெண்மையில்லாத (முழுவயிரம் பாய்ந்த); மரமே கொண்டு வீசினான்- அந்த மராமரத்தைக் கொண்டே எறிந்தான். |
பிற போர் ஆயுதங்கள் செய்ய இயலாத அழிவை எளிய மரத்தையே கொண்டு சுக்கிரீவன் செய்து முடித்தலால், "எளிய மரமே கொண்டு வீசினான்" என்றார். ஏகாரம்-பிரிநிலை. |
(45) |
| 7062. | அன்ன காலை, அரிக் குல வீரரும் |
| மன்னன் முன் புக, வன்கண் அரக்கரும் |
| முன் உழந்த முழங்கு பெருஞ் செருத் |
| தன்னில் வந்து, தலைமயக்குற்றனர். |
| |
அன்ன காலை- அப்பொழுது; அரிக்குல வீரரும்- வானர இனத்தைச் சார்ந்த வீரர்களும்; மன்னன் முன்புக -அரசனான சுக்கிரீவன் முன்பு செல்ல;வன்கண் அரக்கரும் - கொடிய இராக்கதரும்; முன் உழந்த - முன்பு போரிட்டு வருந்திய; முழங்கு பெருஞ்செருதன்னில்- ஒலிக்கின்ற பெரிய போரில்; வந்து தலைமயக்குற்றனர் - வந்து கைகலந்தனர். |
(46) |
| 7063. | கல் துரந்த களம் பட, வஞ்சகர் |
| இற்று உலந்து முடிந்தவர் எண் இலர்; |
| வில் துரந்தன வெங் கணையால் உடல் |
| அற்று உலந்த குரங்கும் அனந்தமே. |
| |
களம் துரந்த கல்பட- போர்க்களத்தில் எறிந்த கற்கள் வீழ்ந்ததனால்; வஞ்சகர் இற்று உலந்து- வஞ்சகராகிய அரக்கர்களில் உயிரற்று ஆயுள் அழிந்து; முடந்தவர் எண்ணிலர் - இறந்து போனவர்கள் கணக்கற்றவர்கள்; வில்துரந்தன- அரக்கரின் விற்கள் செலுத்திய; வெம்கணையால் - கொடிய அம்புகளால்; உடல் அற்று உலந்த குரங்கும் - உடல் இழந்து இறந்த குரங்குகளும்; அனந்தம் - எல்லையில்லாதனவாம். |