பக்கம் எண் :

644யுத்த காண்டம் 

கல்லைக்      கொண்டு     போரிட்ட   வானரங்களும்,
வில்லைக்கொண்டு  போரிட்ட  அரக்கர்களும்  எண்ணற்றோர்
களத்தில் இறந்து பட்டனர் என்பதாம்.
 

(47)
  

7064.

கற்கள் தந்து, நிமிர்ந்து, கடுஞ் செரு 

மற்கடங்கள் வலிந்து மலைந்திட, 

தற்கு அடங்கி உலந்தவர்தம் உயிர் 

தெற்கு அடங்க நிறைந்து செறிந்தவால். 

 

நிமிர்ந்து  கடும் செரு- உயர்ந்து கடுமையாக நிகழ்ந்த
யுத்தத்தில்;     மற்கடங்கள்   -  குரங்குகள்;   வலிந்து-
வலிமையோடு; கற்கள் தந்து மலைந்திட- கற்களை  வீசிப்
போரிட;  தற்கு   அடங்கி  -  (தம்)  கர்வம்    அழிந்து;
உலந்தவர்   தம்  உயிர்- இறந்தவர்களான அரக்கர்களின்
உயிர்கள்; தெற்கு அடங்க-தென்திசை முழுவதும்; நிறைந்து
செறிந்த- நிறைந்து நெருங்கின.
 

மர்க்கடம்-குரங்கு.  தற்கு-தருக்கு;  செருக்கு.  எதுகை 
நோக்கி  மற்கடம்  எனவும்,   தற்கு   எனவும்  வந்தன. 
செய்யுளாதலின்,  தெற்கு-இயமனின்  திசை.  ஆகுபெயராய் 
அவன் உலகைக் குறித்தது.
 

(48)
 

7065.

பாடுகின்றன, பேய்க் கணம்; பல் விதத்து 

ஆடுகின்ற, அறு குறை; ஆழ கடற்கு 

ஓடுகின்ற, உதிரம்; புகுந்து, உடல் 

நாடுகின்றனர், கற்புடை நங்கைமார். 

 

பேய்க்கணம்  பாடுகின்றன-  பேயின்  கூட்டங்கள்
(போர்க்களத்தில்) பாடத் தொடங்கின;அறுகுறை- தலைஅற்ற
கவந்தங்கள்;பல்விதத்து ஆடுகின்ற- பலவகையாக ஆடத்
தொடங்கின;உதிரம் - இரத்தமானது;ஆழ்கடற்கு- ஆழமிக்க
கடலைநோக்கி; ஓடுகின்ற-  ஓடத்தொடங்கின;   கற்புடை
நங்கைமார்   - கற்புடைய    மகளிர்;          புகுந்து-
போர்களத்துக்குள்    புகுந்து;     உடல்  நாடுகின்றனர்-
(இறந்துபட்ட) தத்தம் கணவன்மார்களின்  உடலைத்  தேடத்
தொடங்கினர்.
 

(49)
 

7066.

யானை பட்ட அழி புனல் யாறு எலாம் 

பானல் பட்ட; பல கணை மாரியின் 

சோனை பட்டது; சொல்ல அரும் வானரச் 

சேனை பட்டது; பட்டது, செம் புண்ணீர்.