வச்சிரமுட்டியைச் சுக்கிரீவன் அழித்தல் |
| 7070. | நோக்கி, வஞ்சன் நொறில் வய மாப் பரி |
| வீக்கு தேரினின் மீது எழப் பாய்ந்து, தோள் |
| தூக்கு தூணியும் வில்லும் தொலைத்து, அவன் |
| யாக்கையும் சிதைத்திட்டு, எழுந்து ஏகினான். |
| |
நோக்கி- (அந்நிலை) கண்டு (சுக்கிரீவன்); வஞ்சன் நொறில் வயமாப்பரி- வஞ்சகன் ஆகிய வச்சிரமுட்டியின் விரைந்து செல்லும் வலிய குதிரைகள்; வீக்கு தேரின் மீது- பூட்டிய தேரின் மீது; எழப் பாய்ந்து- எழுந்து பாய்ந்து; தோள் தூக்கு தூணியும் வில்லும் - தோளில் தொங்க விட்டிருந்த அம்பறாத் தூணியையும் வில்லினையும்; தொலைத்து - அறுத்து; அவன் யாக்கையும்- அவனுடைய உடலையும்; சிதைத்திட்டு எழுந்து ஏகினான் - அழித்துவிட்டு, (அங்கிருந்து) கிளம்பிச்சென்றான். |
நொறில்-விரைவு. "நொறில் பரித்தேர் பட நூறி" (3034) என்பார் முன்னும். சிதைத்திட்டு-'இட்டு' துணைவினை. தம் அழிவிற்குக் காரண கருத்தனாகிய வச்சிரமுட்டியை மாய்த்து, படைத்தலைவன் தான் என நிரூபித்தான் சுக்கிரீவன். "தானை படைத்தகையால் பாடுபெறும்" (குறள். 768) எனும் வள்ளுவர் வாய்மொழி உண்மையாதல் காண்க. |
(54) |
| 7071. | மலை குலைந்தென, வச்சிரமுட்டி தன் |
| நிலை குலைந்து விழுதலின், நின்றுளார் |
| குலைகுலைந்து கொடி நகர் நோக்கினார்; |
| அலை கிளர்ந்தென, வானரம் ஆர்த்தவே. |
| |
மலை குலைந்தென - மலை நிலை குலைந்தாற்போல; வச்சிரமுட்டி - வச்சிரமுட்டியானவன்; தன் நிலை குலைந்து விழுதலின்- தன் நிலைதடுமாறி விழுந்ததனால்; நின்றுளார் - (அவனைச் சார்ந்து) நின்றிருந்த அரக்கர்கள்; குலை குலைந்து- நடுநடுங்கி; கொடிநகர் நோக்கினர் - கொடிகள் உயர்ந்த இலங்கை மாநகரை நோக்கித் திரும்பினர்; அலை கிளர்ந்தென வானரம் ஆர்த்த - அலைகள் பொங்கி எழுந்தாற்போல வானரங்கள் பேரொலி செய்தன. |
இப்பாடலின் தொடைப்பொலிவும், நடைநயமும் இன்பந் தருபவை. "மலை குலைந்தென" என வச்சிரமுட்டியைக் குறிப்பதனால், |