பக்கம் எண் :

650யுத்த காண்டம் 

எரியின்   மைந்தன்-   (அப்போது)    அக்கினியின் 
புதல்வனான நீலன்; இருநிலம் கீழ் உற- பெருமைக்குரிய
பூமிக்குள் வேரூன்றி; விரிய நின்ற மராமரம் - பரவி நின்ற
மராமரம்   ஒன்றை; வேரொடும் திரிய வாங்கி- வேரோடு 
திருகி எடுத்து; நிருதர் சேனைபோய் நெரிய - அரக்கரின்
கொடிய  படைகள்  தூளாகுமாறு;   ஊழி  நெருப்பு  என
வீசினான்
- ஊழிக்காலத்து எழும் நெருப்பைப் போல வீசி 
எறிந்தான்.
  

"அரியும்    மற்று   எனது    கூறு   நீலன்    என்று 
அறைந்திட்டானால்"  (கம்ப. 205)  என்றதனால்,    "எரியின்
மைந்தன்"  எனப்பட்டான் நீலன். அவன் வீசிய பச்சை மரம்,
அரக்கர்க்கு எரியும் நெருப்பாயிற்று என்பது ஒரு நயம்.
  

(60)
 

7077.

தேரும், பாகரும், வாசியும், செம் முகக் 

காரும், யாளியும், சீயமும், காண் தகு 

பாரின் வீழப் புடைப்ப, பசும் புணின் 

நீரும் வாரிஅதனை நிறைத்ததே.
 

தேரும் பாகரும்- தேர்களும், அவற்றை ஓட்டுபவர்களும்;
வாசியும்  செம்முகக் காரும் யாளியும் சீயமும்- அவற்றில்
பூட்டப்பட்ட      குதிரைகளும்,       (குருதியால்)    சிவந்த
முகங்களையுடைய  யானைகளும்,   யாளிகளும்,  சிங்கங்களும்;
காண்தகு பாரின் - காணத்தக்க (அழகிய) நிலத்திடையே; வீழ
- (உயிர்   நீத்து)  விழும்படி;  புடைப்ப-  (அந்த   மராமரம்)
தாக்க;  பசும்  புண்ணின் நீரும் - பச்சைப்   புண்ணிலிருந்து
வெளியான  குருதியும்;  வாரி  அதனை நிறைத்தது- கடலை
நிறைத்தது.
 

செம்முகக் கார்-சிவந்த முகமுடைய மேகம் போன்ற யானை;
உவமையாகு பெயர்.
 

(61)
 

7078.

அரக்கர் சேனை அடு களம் பாழ்பட 

வெருக்கொண்டு ஓடிட, வெம் படைக் காவலர் 

நெருக்க, நேர்ந்து, கும்பானு நெடுஞ் சரம் 

துருக்க, வானரச் சேனை துணிந்தவே. 

 

அடுகளம் பாழ்பட- (அப்போது) போர்க்களம் பாழாகுமாறு;
அரக்கர்  சேனை  வெருக்கொண்டு ஓடிட - அரக்கருடைய 
படைகள்   அஞ்சி  ஓடுமாறு;  வெம்படைக்காவலர் - கொடிய 
வானரப்  படைத்தலைவர்;  நெருக்க -  நெருக்கவே; கும்பானு 
நேர்ந்து