பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 651

கும்பானு  என்னும் அரக்க  சேனைத்தலைவன் அங்கு வந்து;
நெடும்சரம் துரக்க- மிகத் தூரம் செல்லும் அம்புகளை ஏவ;
வானரச் சேனை துணிந்த- குரங்குப் படை துண்டுபட்டன.
 

இது  முதல்  ஆறு  பாடல்கள்  கும்பானுவும் இடும்பனும்
போரிட்டு மாண்டது கூறும். நீலன் இட்ட மராமரத்துக்கு அஞ்சி,
அரக்கர் சேனை ஓடுவதைத் தடுத்து,கும்பானு வானரச்சேனைகள்
துண்டுபடுமாறு கணைகள் சொரிந்தான் என்பதாம்.
 

(62)
 

7079.

கண்டு நின்ற கரடியின் காவலன், 

எண் திசாமுகம் எண்ணும் இடும்பன், ஓர் 

சண்டமாருதம் என்ன, தட வரை 

கொண்டு சீறி, அவன் எதிர் குப்புறா, 

 

கண்டு   நின்ற   கரடியின்   காவலன் -    (இவ்வாறு
வானரப்படை   துண்டுபடுவதை)  நோக்கி  நின்ற  கரடிகட்குத்
தலைவனாகிய;   எண்திசாமுகம்  எண்ணும் -  எட்டுத்திக்கில்
இருப்போரும்   மதிக்கின்ற;   இடும்பன் -    (வலியோனாகிய) 
இடும்பன்; தடவரை கொண்டு - ஒரு பெரிய மலையைக் கையில்
கொண்டு; ஓர் சண்ட  மாருதம் என்ன- பெரும் புயல் காற்றுப்
போல; அவன் எதிர் குப்புறா- அக்கும்பானு என்னும் அரக்கர்
படைத்தலைவன் முன் சென்று கவிழ்ந்து குதித்து; சீறி-கோபித்து;
(எறிதலும் என்று அடுத்த பாடலொடு தொடரும்).
 

குளகம்.  குப்புறல்-குதித்தல்.  கரடியின் காவலன் இடும்பன்.
எண்திசா   முகம்     எண்ணும்   இடும்பன்   எனக்கூட்டுக.
திசாமுகம் - ஆகுபெயராய்த்  திசாமுகத்தில்     உள்ளோரைக்
குறித்தது. இடும்பன்-சாம்பவானின் வாயிற்பிரதானி என்பர்.
 

(63)
 

7080.

தொடுத்த வாளிகள் வீழும் முன், சூழ்ந்து எதிர் 

எடுத்த குன்றை இடும்பன் எறிதலும், 

ஒடித்த வில்லும் இரதமும், ஒல்லெனப் 

படுத்த, வாசியும் பதாகையும் பாழ்பட.* 

 

தொடுத்த   வாளிகள் - (கும்பானு  என்னும்  அரக்கர்
படைத்தலைவன்)  விடுத்த  அம்புகள்;  சூழ்ந்து-  சுற்றிலும்;
விழும்முன்-வீழ்வதற்கு முன்னால்; எதிர் எடுத்த குன்றை-
நேராக உயர்த்திப் பிடித்த மலையை; இடும்பன் எறிதலும்-
(கரடிகள்  தலைவனாகிய)   இடும்பன்   வீசி   எறிந்தவுடன்;
(அதனால்) ஒடித்த