வில்லும் இரதமும் - ஒடிக்கப்பெற்ற வில்லும் தேரும்; வாசியும் பதாகையும் பாழ்படக் - குதிரையும் கொடியும் அழிந்து படுமாறு; ஒல் எனப் படுத்த- விரைவாக வீழ்த்தப் பெற்றன. |
(64) |
| 7081. | தேர் அழிந்து, சிலையும் அழிந்து உக, |
| கார் இழிந்த உரும் எனக் காய்ந்து, எதிர் |
| பார் கிழிந்து உகப் பாய்ந்தனன்--வானவர் |
| போர் கிழிந்து புறம் தர, போர் செய்தான். |
| |
வானவர் போர் கிழிந்து புறம்தர- தேவர்கள் போரில் தோற்றுப் புறமுதுகிடும்படியாக; போர் செய்தான் - முன்பு போர் செய்தவனாகிய கும்பானு என்னும் அசுரன்; தேர் அழிந்து - தேர் சிதைந்து; சிலையும் அழிந்து உக- வில்லும் சிதைந்து முறிப்பட்டதனால்; கார் இழிந்த உரும் எனக் காய்ந்து- மேகத்திலிருந்து விழுந்த இடி போலக் கோபித்து; பார் கிழிந்து உக- நிலமே பிளந்து சிதையும்படி; எதிர் பாய்ந்தனன்- இடும்பனுக்கு எதிராகப் பாய்ந்தான். |
சிலை - வில். கார் - மேகம். (தேரிலிருந்து) கும்பானு, குதித்தமைக்கு மேகத்திலிருந்து வீழ்ந்த இடி உவமை. |
(65) |
| 7082. | தத்தி, மார்பின் வயிரத் தடக் கையால் |
| குத்தி நின்ற கும்பானுவை, தான் எதிர் |
| மொத்தி நின்று, முடித் தலை கீழ் உற, |
| பத்தி வன் தடந் தோள் உறப் பற்றுவான். |
| |
தத்தி- (அவ்வாறு) பாய்ந்து; மார்பின் வயிரத் தடக்கையால் - தன் மார்பிலே வயிரம் போன்ற வலிய பெரிய கரங்களால்; குத்தி நின்ற கும்பானுவை- தாக்கி நின்ற கும்பானுவை; தான் எதிர் மொத்தி நின்று- தானும் எதிர்த்து அவனைக் குத்தி நின்று; முடித்தலை கீழ் உற- அவன் மகுடமணிந்த தலை கீழாகுமாறு; பத்திவன் - ஒழுங்குற அமைந்துள்ள அவன் வலிய; தடந்தோள் உறப் பற்றுவான் - பெரிய தோள்களை அழுத்திப் பற்றுவான் ஆனான். |
கும்பானுவைத் தலைகீழாகக் கவிழ்த்து, தோள்களை அழுத்திப் பிடித்து, இடும்பன் கொல்ல முயலும் முயற்சி கூறியவாறு. |
(66) |