பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 653

7083.

கடித்தலத்து இரு கால் உற, கைகளால் 

பிடித்துத் தோளை, பிறங்கலின் கோடு நேர் 

முடித்தலத்தினைக் கவ்வுற மூளைகள் 

வெடித்து வீழ்தர, வீழ்த்தினனாம்அரோ. 

 

கடித்தலத்து  இருகால்  உற-  (கும்பானுவின் உடலின்
இடைப்பகுதியாம்)  மறைவிடத்தில்   இரண்டு   கால்களையும்
அழுத்தி;  கைகளால்  தோளைப்  பிடித்து-    கைகளால்
தோள்களைப்  பிடித்துப்  பற்றி;  பிறங்கலின் கோடு நேர்-
மலைச்சிகரம்   போன்ற;    முடித்தலத்தினை    கவ்வுற-
மகுடத்தலையை வாயால் கல்வி; மூளைகள் வெடித்து வீழ் 
தர
-மூளைப் பகுதிகள் வெடித்துச் சிதறி வீழ; வீழ்த்தினனாம்-
(அந்தக் கும்பானுவை இடும்பன்) உயிரிழக்கச் செய்தான்.
  

மற்போரின் வகைகள் சில இப்பாடலில்  உள்ளமை காண்க.
கரடியின் இயல்புக்கேற்ப அரக்கனின் தலையை வாயால் கல்வி,
மூளை  சிதறச்  செய்து,  கும்பானுவைக் கொன்றான் இடும்பன் 
என்க. 
 

(67)
 

பிரகத்தன் போர்
 

7084.

தன் படைத்தலைவன் படத் தன் எதிர், 

துன்பு அடைத்த மனத்தன், சுமாலி சேய், 

முன் படைத்த முகில் அன்ன காட்சியன், 

வன்பு அடைத்த வரி சிலை வாங்கினான். 

 

தன்       படைத்தலைவன்-   (தன்      கீழிலிருந்த) 
சேனைத்தலைவன்; தன் எதிர் பட- தனக்கு முன்பே உயிர்விட;
துன்பு   அடைத்த  மனத்தன்-    துன்பம்       நிறைந்த
மனத்தையடைந்தவனான;  சுமாலிசேய் -  சுமாலியின் மகனான
பிரகத்தன்;  முன்  படைத்த முகில்  அன்ன காட்சியன்
முன்னே வந்து நின்ற மேகம் போன்ற தோற்றம் உடையவனாய்; 
வன்பு அடைத்த வரிசிலை வாங்கினான்
- வலிமை வாய்ந்த 
தன் கட்டமைந்த வில்லை வளைத்தான்.
  

"இறந்து    வீழ்ந்தனனே   பிரகத்தன்"  என  இப்படலத்து
(7095)ப்பாடலில்   வருதலால்   சுமாலியின்  சேய்   பிரகத்தன்
இவன் என்பது புலனாம். இவன் இராவணனால் கிழக்கு வாசலில்
அணி  வகுக்குமாறு  கட்டளையிடப்பட்டவன். ஒற்றுக் கேள்விப்
படலத்தில்     சேனைகாவலனாக    இவன்   இராவணனோடு 
உரையாடியுள்ளமை  காண்க.  கரிய  மேனியும் வில்லும் உடைய 
பிரகத்தன், வானர வில்லோடு தோன்றும்