பக்கம் எண் :

654யுத்த காண்டம் 

மேகத்துக்குச்சமம்  ஆனான்.  முதல் 11 பாக்கள் பிரகத்தன்
முடிவுகூறும்.
  

(68)
 

7085.

வாங்கி வார் சிலை, வானர மாப் படை 

ஏங்க நாண் எறிந்திட்டு, இடையீடு இன்றி, 

தூங்கு மாரி என, சுடர் வாளிகள், 

வீங்கு தோளினன், விட்டனனாம்அரோ. 

 

வீங்கு  தோளினன் - புயங்கள்   பூரிக்கப்      பெற்ற
பிரகத்தன்;  வார்சிலை  வாங்கி- நீண்ட  வில்லை வளைத்து;
வானர மாப்படை ஏங்க-குரங்கினப் பெரும்படை வருந்துமாறு;
நாண்  எறிந்திட்டு-  நாண் ஒலியெழுப்பி; தூங்குமாரி என-
பொழிகின்ற  மழை   போல;    சுடர்வாளிகள்-   ஒளிமிக்க
அம்புகளை;  இடையீன்றி  விட்டனன் ஆம் - இடைவிடாது 
எய்தனன் ஆம்.
 

போர்  எனில்  பூரிக்கும்  தோளினன்,  ஆதலால் "வீங்கு
தோளினன்"  என்றார், பிரகத்தன் நாண் ஒலி கேட்டு, வானரப் 
படை  வருந்திற்று என  அவன் ஆற்றல்  மிகுதி  கூறியவாறு.
தூங்குதல் - சொரிதல்   "வீழ்பனி    தூங்கத்     துவண்டு"
(திருக்கோவை.  320)  என்பது   காண்க.  ஆம் - உரையசை.
அரோ-அசை. 
  

(69)
 

7086.

நூறும் ஆயிரமும் கணை நொய்தினின் 

வேறு வேறு படுதலின், வெம்பியே, 

ஈறு இல் வானர மாப் படை எங்கணும் 

பாற, நீலன் வெகுண்டு, எதிர் பார்ப்புறா, 

 

நொய்தினின் - விரைவோடு; கணை நூறும் ஆயிரமும்-
அம்புகள்   நூறும்   ஆயிரமுமாக;  வேறு  வேறுபடுதலின்
வெவ்வேறு  வகையில்  (தம்மீது) படுதலால்; ஈறு இல் வானர
மாப்படை
-  எல்லையில்லாக்  குரங்கினத்துப் பெரும்படைகள்;
வெம்பி -  மனம்  கொதித்து;  எங்கணும்  பாற- எல்லாப்
பக்கங்களிலும்  சிதறி  விட;  நீலன் எதிர் பார்ப்புறா- நீலன் 
என்னும் வானர வீரன் எதிரே பார்த்து வெகுண்டு கோபித்து;
  

குளகம் - அடுத்த    பாடலில்     வினை     கொள்ளும்.
பார்ப்புறா - பார்த்து.  நொய்தினின் - விரைவில்.  பாற -  வீற்று
வீற்றாகச் சிதற.
  

(70)