பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 655

7087.

குன்றம் நின்றது எடுத்து, எதிர் கூற்று எனச் 

சென்று எறிந்து, அவன் சேனை சிதைத்தலும், 

வென்றி வில்லின் விடு கணை மாரியால், 

ஒன்று நூறு உதிர்வுற்றது, அக் குன்றமே. 

 

நின்றது  குன்றம்  எடுத்து-  அருகிருந்த ஒரு மலையை 
எடுத்து;  எதிர்  கூற்று  எனச்  சென்று -  எதிரே  வருகிற
கூற்றுவனைப்  போலப்  போய்;   எறிந்து  அவன்  சேனை
சிதைத்தலும்
-தாக்கி அந்தப் பிரகத்தனுடைய படையை அழித்த
போது; வென்றி வில்லின்-அவ்வரக்கன் தனது வெற்றி ஏந்திய
வில்லிலிருந்து;  விடுகணை  மாரியால்-  விடுபட்ட அம்புகள்
என்னும் மழையினால்; அக்குன்றம் - அந்த மலையும்; ஒன்று
நூறு 
உதிர்வு  உற்றது-  ஒன்று நூறாக தூளாகப் (பொடிந்து)
விழுந்தது.
  

குன்றம்  நின்ற  என்பதனை,  நின்ற குன்றம் என மாற்றிப்
பொருள்  கொள்க.  தன்  சேனையை  அம்பினால்  சிதைத்த
பிரகத்தன் சேனையை மலையால் நீலன் சிதைத்தான். விடுகணை
மாரி-உருவகம். 
  

(71)
 

7088.

மீட்டும், அங்கு ஓர் மராமரம் வேரொடும் 

ஈட்டி, வானத்து இடி என எற்றலும், 

கோட்டும் வில்லும், கொடியும், வயப் பரி 

பூட்டும் தேரும், பொடித் துகள் ஆயவே. 

 

மீட்டும் -  (நீலன்)  மீண்டும்; அங்கு  ஓர்  மராமரம்-
அங்கிருந்த மராமரம் ஒன்றை; வேரோடும் ஈட்டி- வேரோடும்
பிடுங்கி; வானத்து இடியென எற்றலும்- விண்ணில் எழும் இடி
போன்று  (முழங்கி)  (அம்மரத்தை)  வீசியபோது;   கோட்டும்
வில்லும்-  வளைத்த  வில்லும்;  கொடியும்- தேரின் கொடியும்;
வயப்பரி பூட்டும் தேரும் - வலிய குதிரைகள் பூட்டிய தேரும்;
துகள் பொடி ஆய- சிறு துகளாய் விட்டன. 
 

(72)
 

7089.

தேர் இழந்து, சிலையும் இழந்திட, 

கார் இழிந்த உரும் எனக் காந்துவான், 

பார் இழிந்து, பரு வலித் தண்டொடும், 

ஊர் இழந்த கதிர் என, ஓடினான். 

 

தேர்  இழந்து சிலையும்  இழந்திட-  (பிரகத்தன்)  தன்
தேரினை  இழந்து,  வில்லையும்  இழந்ததனால்; கார் அழிந்த
உரும்என -