(தனக்குப் பற்றுக்கோடாகிய) மேகத்தை விட்டுவந்த இடி போன்று; காந்துவான்- கொதித்தவனாகி; பார் இழிந்து- மண்ணில் இறங்கி; பருவலி தண்டொடும்- பருத்த வலிமையுள்ள தண்டு என்னும் ஆயுதத்தோடு; ஊர் இழந்த கதிர் என ஓடினான்- ஊர்தியாகிய தேரினை இழந்த சூரியனைப் போல (நீலனை நோக்கி) ஓடினான். |
ஊர்-ஊர்தி தேர், ஊர் இழந்த கதிர், தேர் இழந்த பிரகத்தனுக்கு உவமை. இல்பொருள் உவமை. சூரியன் தேரில் ஊர்ந்து வருவதாக குறிப்பிடல் சங்க காலத்திலிருந்து வரும் மரபாம். "காய் சினத்த கதிர்ச் செல்வன் தேர்பூண்ட மாஅ போல" (பட்டினப். 122. 123) ஊர் என்பது ஊர்கோள்; சூரியனைச் சுற்றி வட்டமாக அமையும் பரிவேடம். இந்த ஊர்கோளை இழந்த சூரியன்போல என்பது சிறந்த உரை. |
(73) |
| 7090. | வாய் மடித்து அழல் கண்தொறும் வந்து உக, |
| போய் அடித்தலும், நீலன் புகைந்து, எதிர் |
| தாய் அடுத்து, அவன்தன் கையின் தண்டொடும் |
| மீ எடுத்து விசும்பு உற வீசினான். |
| |
வாய் மடித்து- வாயினை மடித்தவாறு; அழல்கண் தொறும்வந்து உக- நெருப்பு இருவிழிகளிலும் புறப்பட்டுச் சிந்த; போய் அடித்தலும்- போய் நீலனைத் தாக்கியபோது; நீலன் - நீலன் ஆனவன்; புகைந்து எதிர்தாய் - வெகுண்டு எதிரே தாவிச் சென்று; அடுத்து- நெருங்கிச் சென்று; அவன்தன் கையில் தண்டொடும் - அப்பிரகத்தனது கையில் உள்ள தண்டு என்னும் ஆயுதத்தோடும்;மீ எடுத்து- உயரத்தூக்கி; விசும்புற வீசினான் - விண்ணில் பட வீசினான். |
வாய் மடித்தலும் கண் சிவத்தலும் வெகுளியின் மெய்ப்பாடுகள். கண்களில் நெருப்புச் சிந்த வாய் மடித்த வண்ணம் வந்து பிரகத்தனை அவன் தண்டோடு எடுத்து நீலன் விண்ணில் வீசினான் என்க. |
(74) |
| 7091. | அம்பரத்து எறிந்து, ஆர்ப்ப, அரக்கனும், |
| இம்பர் உற்று, எரியின் திரு மைந்தன்மேல், |
| செம்புனல் பொழியக் கதை சேர்த்தினான், |
| உம்பர் தத்தமது உள்ளம் நடுங்கவே. |
| |
அம்பரத்து எறிந்து ஆர்ப்ப- (இவ்வாறு அந்த அரக்கனை) விண்ணில் வீசி (நீலன்) ஆர்ப்பரிக்கும்போது; அரக்கனும் - அந்தப் பிரகத்தனும்; இம்பர் உற்று - தரையையடைந்து; உம்பர் தம் தமது |