பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 657

உள்ளம்  நடுங்க-  வானுலகத்  தேவர்கள்  தத்தம்  மனம்
நடுங்குமாறு; எரியின்  திரு  மைந்தன் மேல்- நெருப்பின்
மைந்தனான  அந்த  நீலன்  மேல்;  செம்புனல் பொழிய
உதிரம்  சொரியுமாறு;  கதை   சேர்த்தினான் -  தண்டால் 
தாக்கினான்.
  

அம்பரம் - ஆகாயம்.  இம்பர் - இங்குத்  தரை  எனும் 
பொருளில்  வந்தது.  உம்பர் - தேவர். அறங்காத்தற்காக தம்
பொருட்டுப்  போரிடுகின்ற  நீலனுக்கு  ஏதாயினும்  நேர்ந்து 
விடுமோ என்று தேவர் நடுங்கினர். 
 

(75)
 

7092.

அடித்தலோடும், அதற்கு இளையாதவன், 

எடுத்த தண்டைப் பறித்து எறியா, 'இகல் 

முடித்தும்' என்று, ஒரு கைக்கொடு மோதினான், 

குடித்து உமிழ்ந்தெனக் கக்கக் குருதியே. 

 

அடித்தலோடும்-  (பிரகத்தன்    தண்டால்)   அடித்துத் 
தாக்கிய போது; அதற்கு  இளையாதவன் - (நீலன்) அதற்குச்
(சிறிதும்)  சளைக்காதவனாய்;  எடுத்த  தண்டம்  -  (அவன்
கையில்) எடுத்த  தண்டாயுதத்தை;  பறித்து  எறியா- பிடுங்கி 
எறிந்து;  இகல்முடித்தும்  என்று- இப்பகையினை (இப்போது) 
முடிப்பேன் என்று; குடித்து உமிழ்ந்தென-(முன்பு) பருகியுள்ள
உதிரத்தைக்   கொப்புளிப்பதைப்   போல;  குருதி   கக்க-
இரத்தத்தைக் கக்கும்படி; ஒரு கைகொடு தாக்கினான் - ஒரு
கையைக் கொண்டு தாக்கினான் (நீலன்). 
  

குடித்து   உமிழ்ந்தெனக்   குருதி   கக்கினான்   என்றது
தற்குறிப்பேற்றம்.
 

(76)
 

7093.

குருதி வாய்நின்று ஒழுகவும் கூசலன்,

நிருதன், நீலன் நெடு வரை மார்பினில் 

கருதலாத முன் குத்தலும், கைத்து, அவர் 

பொருத பூசல் புகல ஒண்ணாததே. 

 

குருதி    வாய்நின்று     ஒழுகவும்  -  இரத்தமானது
வாயிலிருந்து  ஒழுகவும்;  கூசலன்- அஞ்சாதவனாய்; நிருதன்
- அந்தப்  பிரகத்தன்;   நீலன்நெடு   வரை  மார்பினில்
நீலனுடைய  நீண்ட மலை  போன்ற மார்பில்; கருதலாத முன் 
குத்தலும்
- நீலன் நினைப்பதற்கு முன் குத்தியவுடன்; அவர் -
அவ்விருவரும்;  கைத்துப் பொருதபூசல் - ஒருவருக்கொருவர
வெறுப்புடன்  புரிந்த  போர்; புகல ஒண்ணாதது- (சொல்லால்)
சொல்லும் தரம் உடையதன்று.