நினைப்பதற்கு முன் பிரகத்தன் அவனைக் குத்தினான் என்பார். "கருதலாத முன் குடுத்தலும்" என்றார். எண்ணத்திலும் விரைந்தது செயல் என்பதாம். கைத்தல்-வெறுத்தல், வெகுளல். |
(77) |
| 7094. | மற்று, நீலன், அரக்கனை மாடு உறச் |
| சுற்றி வால்கொடு, தோளினும், மார்பினும், |
| நெற்றி மேலும், நெடுங் கரத்து எற்றலும், |
| இற்று, மால் வரை என்ன, விழுந்தனன். |
| |
மற்று- மேலும்; நீலன்- நீலன் ஆனவன்; அரக்கனை- பிரகத்தனை; வால் கொடு மாடு உறச் சுற்றி - வாலினால் பக்கமெல்லாம் அழுத்தி சுற்றி; தோளினும் மார்பினும் நெற்றி மேலும் - தோள்களிலும் மார்பிலும் நெற்றியிலும்; நெடுங்கரத்து எற்றலும் - நீண்ட கைகளால் குத்தியபோது; இற்றமால் வரை என்ன விழுந்தனன்-அடியோடு பெயர்ந்த பெரிய மலைபோலப் பிரகத்தன் (மண்மேல்) வீழ்ந்தான். |
பிரகத்தன் கால் இற்று, வீழ்தற்கு அடியோடு பெயர்ந்து வீழ்ந்த மலை உவமையாயிற்று. பிரகத்தன்- பெரிய மலை போன்றவன். பெயருக்கேற்ப வீழ்ந்தான் என்பார். "மால்வரை என்ன வீழ்ந்தனன்" என்ற நயம் காண்க. |
(78) |
| 7095. | 'இறந்து வீழ்ந்தனனே பிரகத்தன்' என்று |
| அறிந்து, வானவர் ஆவலம் கொட்டினார்; |
| வெறிந்த செம் மயிர் வெள் எயிற்று ஆடவர் |
| முறிந்து, தம்தம் முது நகர் நோக்கினார்.* |
| |
பிரகத்தன் இறந்து வீழ்ந்தனன் என்று- பிரகத்தனும் மடிந்து விழுந்தானே என்று; அறிந்து வானவர் - (வியப்புடன்) அறிந்து தேவர்கள்; ஆவலம் கொட்டினர் - (மகிழ்ச்சியால்) ஆரவாரம் செய்தார்கள்; வெறிந்த செம்மயிர் வெள் எயிற்று ஆடவர்-செறிந்த சிவந்த முடியையும் வெள்ளிய பற்களையுமுடைய அரக்க வீரர்கள்; முறிந்து- மனம் உடைந்து; தத்தம் முதுநகர் நோக்கினர் - தங்கள் தங்களுக்குரிய தொன்மை வாய்ந்த நகர்ப் பகுதிகளை நோக்கிச் சென்றனர்; |