பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 659

நீலனைப்  பிரகத்தன்  கதையால்  அடித்தபோது "உம்பர்
தத்தமது உள்ளம் நடுங்கினர்" (7091) இப்போது அவன் மடிவு,
தேவர்களின்  ஆரவாரத்திற்கு  காரணமாயிற்று.  புறமுதுகிட்டு
ஓடத்துவங்கினர்   என்னாது,   "முதுநகர்  நோக்கினர்"  என
நயம்பட மொழிந்த நேர்ததியை உணர்க.
 

(79)
 

தெற்கு வாயிலில் அங்கதன் நிகழ்த்திய போர்
  

7096.

தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர்

மல் குலாவு வயப் புயத்து அங்கதன் 

நிற்கவே, எதிர் நின்றிலர் ஓடினார், 

பொன் குலாவு சுபாரிசன் பொன்றவே. 

 

தெற்கு வாயிலில் சென்ற நிசாசரர் - தெற்குக் கோட்டை
வாயிலில்  போர்க்குச்  சென்ற   அரக்கர்கள்;    மல்குலாவும்
வயப்புயத்து அங்கதன்
- வலிமை விளையாடும் ஆற்றல் மிக்க
தோள்களையுடைய  அங்கதன்; நிற்கவே- போரிட்டு நிற்கையில்; 
பொன்குலாவு  சுபாரிசன்
- அழகு விளங்கும் சுபாரிசன் என்ற 
அணித்தலைவன்;  பொன்ற-  இறந்து  விழுந்தவுடன்;   எதிர் 
நின்றிலர் ஓடினர்
- எதிரே நிற்க இயலாதவராய் ஓடினார்கள்.
 

நிசாசரர் - இரவில்  சஞ்சரிப்பவர்  அரக்கர்.  மல் - இங்கு
வலிமையைக் குறித்தது. வலிமை எனும் ஆற்றல் விளையாடுகளம்
அங்கதன்  தோள்கள் என்று  அழகுற மொழிந்தார்.  "அங்கதன்
நிற்க அரக்கர் நின்றிலர்" என்றதில் உள்ள முரண் சுவையுணர்க.
 

(80)
 

மேலை வாயிலில் அனுமன் நிகழ்த்திய போர்
  

7097.

நூற்று-இரண்டு எனும் வெள்ளமும், நோன் கழல் 

ஆற்றல் சால் துன்முகனும், அங்கு ஆர்த்து எழ, 

மேல் திண் வாயிலில் மேவினர் வீடினார்,-- 

காற்றின் மா மகன் கை எனும் காலனால். 

 

திண்மேல்  வாயிலில்- வலிமை மிக்க மேற்குக் (கோட்டை)
வாயிலில்;  நூற்றிரண்டு  எனும்  வெள்ளமும் -   நூற்றிரண்டு
வெள்ளம் அளவுடைய இராக்கதப் படை முழுவதும்;நோன் கழல்-
வலிய வீரகண்டையணிந்த; ஆற்றல்சால் துன் முகனும் - வலிமை
மிக்க துன்முகன் என்பவனும்; ஆர்த்து எழ-  ஆர்ப்பரித்து  எழ;
மேவினர் - அங்கு  வந்தவர்கள்;  காற்றின்   மாமகன் -  வாயு
மைந்தனாகிய