அனுமானுடைய; கையெனும் காலனால் - கரம் என்னும் கூற்றுவனால்; வீடினர் - இறந்து பட்டனர். |
மேற்கு வாயிலில் நூற்றிரண்டு வெள்ளம் வானர சேனையுடன் நிற்குமாறு இந்திரசித்தினை இராவணன் பணித்தமையை, அணிவகுப்புப் படலத்தில் (6965) காண்க. அவன் கீழ் உள்ள படையில் ஓர் அணியின் தலைவன் துன்முகன். நூற்றிருபது வெள்ளமும் மடிந்தது என்பது பொருள் அன்று; நூற்றிருபது வெள்ளத்தில் துன்முகன் உட்பட, அனுமனை எதிர்த்தவர்கள் மடிந்தனர் என்பது கருத்து. |
(81) |
நால்திசைப் போர் பற்றித் தூதுவர் இராவணனுக்குச் சொல்லுதல் |
| 7098. | அன்ன காலை, அயிந்திர வாய் முதல் |
| துன்னு போர் கண்ட தூதுவர் ஓடினார், |
| 'மன்ன! கேள்' என, வந்து வணங்கினார்; |
| சென்னி தாழ்க்க, செவியிடைச் செப்பினார்; |
| |
அன்னகாலை- அப்போது; அயிந்திர வாய்முதல் - இந்திர திசையாகிய கிழக்குத் திசை தொடங்கி (நான்கு வாயிலிலும்); துன்னுபோர் கண்ட- நெருங்கிய போரினை (நேரில்) பார்த்த; தூதுவர் ஓடினர்- தூதர்கள் விரைந்து ஓடிச் சென்று; வந்து- (இராமன் முன்பு) வந்து; வணங்கினர் - பணிந்தவராய்; சென்னி தாழ்க்க- இராவணன் தலை வளைத்துக் கேட்க; மன்ன கேள் என- எங்கள் மன்னவனே கேட்பாயாக என்று; செவி இடைச் செப்பினார்- இராவணன் காதுகளில் சொன்னார்கள். |
அயிந்திரன் - இந்திரன். அவன் காக்கும் திசை கிழக்கு. போர் நிலையினை அவ்வப்போது மன்னவர்கள் அறிந்து கொள்ளுமாறு படையமைந்திருந்தமையை இப்பாடலால் அறியலாம். |
(82) |
| 7099. | 'வடக்கு வாய்தலில் வச்சிரமுட்டியும், |
| குடக்கு வாயிலில் துன்முகக் குன்றமும், |
| அடக்க அரும் வலத்து ஐம்பது வெள்ளமும், |
| படச் சிதைந்தது, நம் படை' என்றனர். |
| |
வடக்கு வாய்தலில் வச்சிரமுட்டியும் - வடக்கு வாயிலின் கண் வச்சிரமுட்டி என்னும் படைத்தலைவனும்; குடக்கு வாயிலில் துன்முகக் குன்றமும் - மேற்கு வாயிலின் கண் துன்முகன் என்னும் மலை எனலாம் படைத்தலைவனும்; அடக்க அரும் வலத்து - |