பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 661

பிறரால்  வெல்ல  முடியாத   வலிமை  உடைய;   ஐம்பது
வெள்ளமும்
- ஐம்பது  வெள்ளம் என்னும் எண் அளவான 
சேனையும்; பட- அழியும்படி; நம் படை சிதைந்தது- நமது 
சேனை கெட்டழிந்தது; என்றனர்- என்று சொன்னார்கள்.
 

மடிந்த  சேனையின்  அளவு  ஐம்பது வெள்ளம் ஆகும்
என்று கொள்க. ஏன் எனில் மேற்கு வாயிலில் மட்டும் நூற்று
இரண்டு   வெள்ளம்  சேனை  என்பதனை   முன்  (7097) 
கூறியுள்ளமையால் துன்முகக் குன்றம்-உருவகம்.
  

(83)
 

7100.

'வென்றி வேற் கை நிருதர் வெகுண்டு எழ, 

தென் திசைப் பெரு வாயிலில் சேர்ந்துழி, 

பொன்றினான், அச் சுபாரிசன்; போயினார் 

இன்று போன இடம் அறியோம்' என்றார்.* 

 

வென்றி  வேற்கை   நிருதர்  -  வெற்றி   பொருந்திய
வேல்களைக் கரங்களில் ஏந்திய அரக்கர்கள்; வெகுண்டு எழ-
சினந்து  எழுந்து; தென் திசைப் பெருவாயிலில் சேர்ந்துழி
தெற்குக் (கோட்டை)   வாசலை     அடைந்த     அளவில்; 
அச்சுபாரிசன் பொன்றினான்
- அந்தச்  சுபாரிசன் மடிந்தான்; 
போயினார்
- அவனுடன் போனவர்கள்; இன்று போன இடம்
- இன்று  சென்ற இடம் (எதுவென்று); அறியோம் என்றார் -
அறிய இயலவில்லை என்று வருந்தினார்கள்.
 

மகோதரனும் மாபெரும் பக்கனும் தெற்குவாசல் பொறுப்பாளர
என்று  (6964)  அணிவகுப்புப்  படலப்  பாடல்  சுட்டும். தெற்கு
வாயிலில்  அங்கதனால்  சுபாரிசன்  கொல்லப்பட்டதை இப்படல
80  ஆம்  பாடலில்  கூறினார்.  இவ்வாயிலுக்கு  அனுப்பப்பட்ட
வீரர்கள்  16  கோடி என்பதனை,  "தென்திசை வாயிலின் வைகும்
தீயவர்  என்றவர்  எண்ணிரு  கோடி  என்பரால்" (6537) என்று
முன்பு குறித்தார்.
  

(84)
 

7101.

"கீழை வாயில், கிளர் நிருதப் படை,

ஊழி நாளினும் வெற்றி கொண்டு உற்ற நின் 

ஆழி அன்ன அனீகத் தலைமகன் 

பூழியான்; உயிர் புக்கது விண்' என்றார். 

 

கீழை வாயில்-கிழக்கு  வாயிலில்; ஊழி  நாளினும் வெற்றி
கொண்டுற்ற
-   யுக  முடிவுக்  காலத்திலும்  வெற்றியே  ஈட்டிய;
நின்   ஆழியன்ன   அனிகத்தலைமகன்  -      உன்னுடைய 
ஆணைச்சக்கரம்