போன்ற சேனைத்தலைவன்; கிளர் நிருதப் படை- எழுச்சி கொண்ட அரக்கர்படை(யுடன் சென்று பொருது); பூழியான்- புழுதியாய் (தூளாய்) ஆனான்; உயிர் விண் புக்கது என்றார் - அவன் உயிர் வானுலகடைந்தது என்றார்கள். |
ஊழிக்காலத்தும் வெற்றி கொண்ட பிரகத்தனையும் வென்ற வானரப் படையின் பேராற்றலை விளக்கினார். |
(85) |
இராவணன் பெருஞ்சினம் கொள்ளல் |
| 7102. | என்ற வார்த்தை, எரி புகு நெய் எனச் |
| சென்று, சிந்தை புகுதலும், சீற்றத் தீ |
| கன்று கண்ணின்வழிச் சுடர் கான்றிட, |
| நின்று நின்று, நெடிது உயிர்த்தான்அரோ. |
| |
என்ற வார்த்தை- என்று ஒற்றர் கூறிய வார்த்தைகள்; எரிபுகு நெய் என- தீயில் ஊற்றிய நெய் போல; சிந்தை சென்று புகுதலும்- மனத்துட் சென்று சேர்ந்தவுடனேயே; சீற்றத் தீ- சினம் என்னும் தீயானது; கன்று- வெதும்பிய; கண்ணின் வழி- கண்ணின் வழியாக; சுடர்கான்றிட- பொறிகளைச் சிந்த; நின்று நின்று நெடிது உயிர்த்தான் - விட்டு விட்டுப் பெருமூச்செறிந்தான். |
வெகுளிச் சுவையின் மெய்ப்பொருளை இப்பாடலால் அறிக. வானரங்களின் வெற்றிச் செய்தி நெருப்பில் ஊற்றிய நெய்.அந்த நெருப்பு கண் வழியாகப் பொறிப் பொறியாய்ச் சிந்தியது என அழகுபட உருவகித்தார். "பெருஞ்சினம் புனற்படு நெருப்பில் பொம்மெனச் சிதற" (பெருங். 1. 47-129)என்பார் கொங்குவேளிரும். |
(86) |
| 7103. | மறித்தும், 'ஆர் அவன் ஆர் உயிர் வவ்வினான்? |
| இறுத்துக் கூறும்' என்றான்; 'இசை எங்கணும் |
| நிறுத்தும் நீலன், நெடும் பெருஞ் சேனையை |
| ஒறுத்து, மற்று அவனோடும் வந்து உற்றனன்; |
| |
மறித்தும் - மீண்டும் (இராவணன் தூதரைப் பார்த்து); ஆர்அவன் ஆர் உயிர் வவ்வினான் - யார் அந்தப் பிரகத்தனுடைய உயிரைக் கவர்ந்தவன்?; இறுத்துக் கூறும் - விடை சொல்லுங்கள்; என்றான் - என்று கேட்டான்; எங்கணும் - (அதற்குத் தூதர்கள்) எல்லாத் திசைகளிலும்; இசை நிறுத்தும் நீலன் - தன் புகழை நிலை நிறுத்தியுள்ள நீலன் என்பவன்; நெடும் பெருஞ் சேனையை- நீண்ட |