பெரிய (நம்) படையை; ஒறுத்து - அழித்து; மற்றும் அவனோடும் வந்து உற்றனன்-பிறகு அப் பிரகத்தனோடும் போரிட வந்தடைந்தான். |
இச்செய்யுளின் தொடர், அடுத்த செய்யுளின் "வீந்தனன்" என்பதனோடு முடியும். "இசையெங்கணும்" என்பது தொடங்கி, அடுத்த பாடல் "வீந்தனன்" என்பது முடியத் தூதுவர் கூற்று. இறுத்தல்-விடையிறுத்தல். |
(87) |
| 7104. | 'உற்ற போதின் இருவரும், ஒன்று அல, |
| கற்ற போர்கள் எலாம் செய்த காலையில், |
| நெற்றிமேல், மற்று அந் நீலன் நெடுங் கையால் |
| எற்ற, வீந்தனன்' என்ன இயம்பினார். |
| |
உற்ற போதின் - (நீலன், பிரகத்தனோடு) போரிட வந்த போதில்; இருவரும் - அவ்விரு வீரர்களும்; ஒன்றல- ஒரு வகையல்ல; கற்ற போர்கள் எலாம் செய்த காலையில்- (தாங்கள்) பயின்றிருந்த போர் வகைகள் எல்லாம் புரிந்து போரிடும் வேளையில்; அந்நீலன் - அந்த நீலன் என்பவன்; நெற்றி மேல் - பிரகத்தனுடைய நெற்றியின் மீது; நெடுங்கையால் எற்ற - நீண்ட கையினால் தாக்க; வீந்தனன் - மாண்டு வீழ்ந்தனன் (பிரகத்தன்); என்ன இயம்பினார் - என்று விடையிறுத்தனர் (தூதுவர்). |
போர்க்கல்வியைக் கற்ற தீரர்கள் இருவரும் என்பது தோன்ற, "கற்ற போர்கள்" என்றும், அவை பல திறத்தனவாய், கிளை விரித்தனவாய் இருந்தன என்பது தோன்ற, "கற்ற போர்கள் எலாம்" என்றும் உரைத்தார். கற்ற போர்-விற்போர், மற்போர், யானை ஏற்றம், குதிரை ஏற்றம், தேர் செலுத்துதல் முதலியனவாம். |
(88) |
| 7105. | 'அன்னவன்னொடும் போன அரக்கரில் |
| நல் நகர்க்கு வந்தோம், ஐய! நாங்களே' |
| என்ன என்ன, எயிற்று, இகல் வாய்களைத் |
| தின்னத் தின்ன, எரிந்தன திக்கு எலாம். |
| |
ஐய-தலைவனே! அன்னவன்னொடும் போன அரக்கரில்- அப்பிரகத்தனோடு போருக்குப் போன அரக்க வீரர்களில்; நல் நகர்க்கு வந்தோம் நாங்களே- (நம்) அழகிய இலங்கை மாநகர்க்கு (மீண்டு) வந்தவர்கள் நாங்கள் மட்டுமே; என்ன என்ன- என்று தூதுவர் கூறக்கூற; இகல் வாய்களை எயிற்று- (இராவணன்) தனது |