வினவிய வாய்கள் பத்தினையும் பற்களினால்; தின்னத் தின்ன- பன்முறை கடித்துக் கொண்ட போது; திக்கு எலாம் எரிந்தன- திசைகள் யாவும் தீப்பற்றி எரிந்தன. |
மற்றவர்கள் போரில் இறந்தார்கள் என்று உரைக்கும் துணிவின்றி, அப்பொருள் தானாகத் தோன்றுமாறு, "நகர்க்கு வந்தோம் நாங்களே" எனக் கூறிய சாதுரியம் பாராட்டற்குரியது. |
(89) |
இராவணன் போருக்குப் புறப்படுதல் |
| 7106. | மாடு நின்ற நிருதரை, வன்கணான் |
| ஓட நோக்கி, 'உயர் படையான் மற்று அக் |
| கோடு கொண்டு பொருத குரங்கினால் |
| வீடினான்!' என்று, மீட்டும் விளம்பினான்: |
| |
மாடு நின்ற நிருதரை- அருகில் நின்ற அரக்கர்களை; வன்கணான் - கொடுமை நிறைந்த கண்களால் இராவணன்; ஓட நோக்கி - (அஞ்சி அவர்) ஓடுமாறு உறுத்துப் பார்த்துவிட்டு; உயர் படையான்- சிறந்த ஆயுதங்களையுடைய பிரகத்தன்; அக்கோடு கொண்டு- அந்த மரக்குச்சிகளைக் கொண்டு; பொருத குரங்கினால் வீடினான் - போரிட்ட குரங்கால் மாண்டான்; என்று மீட்டும் விளம்பினான் - என்று திரும்பவும் கூறிக்கொண்டான். |
ஒப்புயர்வற்ற ஆயுதங்களை ஏந்திய பிரகத்தன், வெறுங் கிளைகளை ஏந்திய குரங்குக்கா தோறறான் எனும் இராவணனின் நெஞ்சப் பொருமல் வெளிப்பட, "உயர் படையான் மற்று அக்கோடு கொண்டு பொருத குரங்கினால் வீடினான்?" என்றார். மற்று-வினைமாற்றுப் பொருளில் வந்தது. |
(90) |
| 7107. | ' "கட்டது, இந்திரன் வாழ்வை; கடைமுறை |
| பட்டது, இங்கு ஓர் குரங்கு படுக்க" என்று |
| இட்ட வெஞ் சொல் எரியினில், என் செவி |
| சுட்டது; என்னுடை நெஞ்சையும் சுட்டதால்; |
| |
கட்டது இந்திரன் வாழ்வை- (இந்தப் பிரகத்தன்) வேருடன் களைந்தது இந்திரன் வாழ்க்கையை; கடைமுறை- இறுதியில்; இங்குபட்டது- இப்போது அவன் அழிந்ததோ; ஓர் குரங்கு படுக்க- ஒரு வானரம் கொன்றதனால்; என்று இட்ட வெஞ்சொல் - என்று (இத்தூதர்கள்) தந்த கொடுஞ்சொல்லாகிய; எரியினில் - |