நிலைதடுமாறின; குலையா - என்றும் நிலைகுலையாத; தேவதேவனும்- சிவபெருமானும்; விரிஞ்சனும் - பிரமனும்; சிரதலம் குலைந்தார் - தலை நடுக்கம் உற்றனர். |
(225) |
| 7242. | ஊழி வெங் கனல் ஒப்பன, துப்பு அன உருவ, |
| ஆழி நீரையும் குடிப்பன, திசைகளை அளப்ப, |
| வீழின் மீச்செலின், மண்ணையும் விண்ணையும் |
| தொளைப்ப, |
| ஏழு வெஞ் சரம், உடன் தொடுத்து, இராவணன் |
எய்தான். |
| |
ஊழி வெங்கனல் ஒப்பன - (அப்போது) ஊழிக்காலத்துத் தோன்றும் கொடுந்தீயை ஒப்பனவும்; துப்பன உருவ- பவளம் போன்ற நிறம் உடையனவும்; ஆழி நீரையும் குடிப்பன- கடல் நீரையும் பருக வல்லனவும்; திசைகளை அளப்ப - திக்குகள் யாவையும் அளக்க வல்லனவும்; வீழின் மண்ணையும்- கீழே விழுந்தால் பூமியையும்; மீச்செலின் விண்ணையும் - மேல் நோக்கிப் பாய்ந்தால் வானத்தையும்; தொளைப்ப- தொளைக்க வல்லனவும் ஆகிய; வெம்சரம் ஏழும் - கொடிய கணைகள் ஏழினையும்; உடன் தொடுத்து - சேரத் தொடுத்து; இராவணன் எய்தான்- இராவணன் (இராமபிரான் மேல்) விடுத்தான். |
(226) |
| 7243. | எய்த வாளியை, ஏழினால், ஏழினோடு ஏழு |
| செய்து வெஞ் சரம் ஐந்து ஒரு தொடையினில் |
| சேர்த்தி, |
| வெய்து கால வெங் கனல்களும் வெள்குற, |
| பொறிகள் |
| பெய்து போம் வகை, இராகவன் சிலைநின்று |
பெயர்த்தான். |
| |
எய்த வாளியை - (இராவணன்) விடுத்த அம்புகளை; ஏழினால்- தன்னுடைய ஏழு அம்புகளால்; ஏழினோடு ஏழு எய்து - (ஒவ்வொன்றும்) ஏழேழு நாற்பத்தொன்பது துண்டுகள் ஆகுமாறு துண்டித்து; ஒரு தொடையினில் - ஒருமுறை தொடுக்கையில்; வெம்சரம் ஐந்து சேர்த்தி - கொடுங்கணைகள் ஐந்தினையும் ஒருசேரப் பொருத்தி; வெய்து கால வெங்கனல்களும்- வெய்யது ஆகிய ஊழிக்கால நெருப்புகளும்; வெள்குற- நாணுமாறு; |