பொறிகள் பெய்து - தீப்பொறிகள் கக்கியவாறு;போம்வகை - செல்லும் வண்ணம்; இராகவன் சிலை நின்று பெய்தான் - இராமபிரான் தன் வில்லினின்று எய்தான். |
(227) |
| 7244. | வாளி ஐந்தையும் ஐந்தினால் விசும்பிடை மாற்றி, |
| ஆளி மொய்ம்பின் அவ் அரக்கனும், ஐ-இரண்டு |
| அம்பு |
| தோளில் நாண் உற வாங்கினன், துரந்தனன்; சுருதி |
| ஆளும் நாயகன் அவற்றையும் அவற்றினால் |
அறுத்தான். |
| |
ஆளி மொய்ம்பின் அவ்அரக்கனும்- ஆளியைப் போன்ற வலிய அரக்கனாம் இராவணனும்; வாளி ஐந்தையும்- (இராமபிரான் விடுத்த) ஐந்து அம்புகளையும்; ஐந்தினால் - ஐந்து அம்புகளினால்; விசும்பிடை மாற்றி- ஆகாயத்திலேயே உரு அழித்து; ஐயிரண்டு அம்பு - பத்துப் பாணங்களை; தோளில் நாண் உற வாங்கினன் துரந்தான்- தன் தோளில் நாண் பொருந்துமாறு வளைத்துச் தலைவனான இராமபிரானும்; அவற்றையும்- அந்தப் பத்துக் கணைகளையும்; அவற்றினால் அறுத்தான் - பத்துப் பாணங்களினால் அறுத்துத் தள்ளினான். |
(228) |
| 7245. | அறுத்து, மற்று அவன் அயல் நின்ற அளப்ப அரும் |
| அரக்கர். |
| செறுத்து விட்டன படை எல்லாம் கணைகளால் |
| சிந்தி, |
| இறுத்து வீசிய கிரிகளை எரி உக நூறி, |
| ஒறுத்து, மற்று அவர் தலைகளால் சில மலை |
உயர்த்தான். |
| |
அறுத்து - (இராமபிரான் அரக்கன் கணைகளை) அறுத்தெறிந்து; மற்று -பின்பு; அவன் அயல் நின்ற அளப்பரும் அரக்கர் - அந்த இராவணனின் அருகே நின்ற அளத்தற்கரிய அரக்கர்; செறுத்து விட்டன படை எலாம் - வெகுண்டு விட்ட படைக்கலங்கள் யாவற்றையும்; கணைகளால் சிந்தி - அம்புகளால் சிதறடித்து; இறுத்து வீசிய கிரிகளை- (அவர்கள்) அகழ்ந்து வீசிய மலைகளை யெல்லாம்; எரி உக நூறி ஒறுத்து - தீப்பொறி |