பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 753

சிதறுமாறு பொடி செய்து ஒழித்து; அவர் தலைகளால் சிலமலை
உயர்த்தான்
- அந்த அரக்கர்களுடைய  (அறுபட்ட) தலைகளால்
சிலமலைகள் உயர்ந்து தோன்றுமாறு செய்தான்.
 

எல்லோரும்  கல்லால் மலை செய்யலாவது இயல, பெருமான்
தலையால்  மலைசெய்ய வல்லான்  என  அவனது "அகடிதகடநா
சாமர்த்தியம்" கூறியவாறு. தலைமலை ஒன்றல்ல என்பார், "சிலமலை
செய்தான்" என்றார். 
 

(229)
 

7246.

மீனுடைக் கருங் கடல் புரை இராக்கதர் விட்ட 

ஊனுடைப் படை, இராவணன் அம்பொடும் ஓடி, 

வானரக் கடல் படா வகை, வாளியால் மாற்றி, 

தானுடைச் சரத்தால் அவர் தலைமலை தடிந்தான். 

 

மீன்    உடைக்   கருங்கடல்   புரை   இராக்கதர் -
மீன்களையுடைய   கருங்கடலினைப்   போன்ற (பெருந்திரளான)
இராக்கதர்;விட்ட ஊனுடைப் படை - செலுத்திய தசை படிந்த
படைக்கருவிகள்;      இராவணன்   அம்பொடும்    ஓடி -
இராவணனுடைய அம்புகளுடனே ஓடி;  வானரக்  கடல் படா
வகை
- வானர சேனை என்னும் கடலின் மீது  படாத  வண்ணம்;
வாளியான் மாற்றி - (தன்னுடைய) அம்புகளால் விலக்கி; தான்
உடைச்சரத்தால்
-  தன்னுடைய  வேறு  அம்புகளால்; அவர் 
தலை  மலை
-  அரக்கர்களுடைய  தலை  எனும் மலைகளை;
தடிந்தான் - அழித்துக் குவித்தான் (பெருமகன்). 
 

(230)
 

7247.

இம்பரான் எனில், விசும்பினன் ஆகும், ஓர் 

இமைப்பில்;

தும்பை சூடிய இராவணன் முகம்தொறும் தோன்றும்; 

வெம்பு வஞ்சகர் விழிதொறும் திரியும்;--மேல்  

நின்றான்

அம்பின் முன் செலும், மனத்திற்கும் முன் செலும்,  

அனுமன்.

 

மேல் நின்றான் - தன் புயத்தின் மீதிருந்த இராமபிரானுடைய;
அம்பின்   முன்  செலும் - அம்பின்  (வேகத்திற்கும்) முந்திச்
செல்லுவான்;    மனத்திற்கும்   முன்   செலும்  அனுமன் -
மனவேகத்திற்கும்  முன்   செல்கின்றவனான   அனுமன்;   ஓர்
இமைப்பில் 
-  ஒரு   கணப்பொழுதில்;  இம்பரான்  எனின் -
இவ்வுலகத்தினன் என நினைவோமாயின்;விசும்பினன் ஆகும்-