பக்கம் எண் :

754யுத்த காண்டம் 

ஆகாயத்தில் அடுத்த கணத்தில் இருப்பவன் ஆவான்; தும்பை
சூடிய  இராவணன்  முகம்  தொறும் தோன்றும்
- தும்பை
மாலையைச்  சூடிப்  போரிடுகின்ற  பத்து தலைகளின் முன்பும்
(மறுகணம்)  தோன்றுவான்;  வெம்பு  வஞ்சகர் விழிதொறும்
திரியும்
-  (அடுத்தகணம்) கொதிக்கின்ற வஞ்சகராம் அரக்கர்
விழிகள் தோறும் காட்சிப்படுவான்.
 

ஓர் இமைப்பின்-இடைநிலைத்தீபகம். 

(231)
 

போர்க்களக் காட்சிகள்
 

7248.

ஆடுகின்றன, கவந்தமும்; அவற்றொடும் ஆடிப் 

பாடுகின்றன, அலகையும்; நீங்கிய பனைக் கைக் 

கோடு துன்றிய கரிகளும் பரிகளும் தலைக்கொண்டு 

ஓடுகின்றன, உலப்பு இல, உதிர ஆறு உவரி.

 

கவந்தமும் ஆடுகின்றன - தலையற்ற உடல்கள் (களத்தில்)
கூத்தாடத் தொடங்கின;அலகையும் - பேய்களும்; அவற்றொடும்
ஆடி
- அந்தக் கவந்தங்களுடனே கூடி ஆடி;பாடுகின்றன- பாடத்
தொடங்கின; உலப்பில உதிரம் ஆறு- வற்றுதலில்லாத இரத்தப்
பெருக்குகள்; பனைக்கை துன்றிய கோடுநீங்கிய கரிகளும் -
பனை  போன்ற  கரங்களுடன் முன்பு நெருங்கியிருந்த கொம்புகள்
நீங்கப்  பெற்ற   யானைகளையும்;  பரிகளும் - குதிரைகளையும்;
தலைக்கொண்டு - தம்மிடம்  அகப்படுத்திக்  கொண்டு; உவரி
ஓடுகின்றன
-கடலை நோக்கி ஓடிப் பாய்வன ஆயின. 
 

(232)
 

7249.

அற்ற ஆழிய, அறுப்புண்ட அச்சின அம்போடு 

இற்ற கொய் உளைப் புரவிய, தேர்க் குலம் எல்லாம்; 

ஒற்றை வாளியோடு உருண்டன, கருங் களிற்று  

ஓங்கல்;

சுற்றும் வாசியும் துமிந்தன, அமர்க் களம் தொடர்ந்த. 

 

அமர்க்களம்  தொடர்ந்த -  போர்க்களத்தில்  தொடர்ந்து
வந்த; தேர்க்குலம் எல்லாம்- தேர்க்கூட்டங்கள்  யாவும்; அற்ற
ஆழிய
- துண்டித்த  சக்கரங்களை உடையனவும்; அறுப்புண்ட
அச்சின
- முறிந்து போன அச்சுக்களையுடையனவும்; இற்ற கொய்
உளைப் புரவிய
- இறந்து போன கொய்து  அலங்கரிக்கப் பெற்ற
பிடரி மயிர்களையுடைய குதிரைகளையுடையனவும்; கருங்களிற்று