ஓங்கல் - கரிய யானைகள் என்னும் மலைகள்; ஒற்றை வாளியோடு உருண்டன- ஒரே அம்புகள் பட்டு (களத்தில்) உருண்டு கிடந்தன; சுற்றும் வாசியும் துமிந்தன- சுற்றித்திரியும் குதிரைகளும் துண்டுபட்டுக் கிடந்தன. |
"அமர்க்களந்தொடர்ந்த" என்பது கடைநிலைத் தீபகம்." |
(233) |
7250. | தேர் இழந்து, வெஞ் சிலைகளும் இழந்து, செந் |
| தறுகண் |
| கார் இழந்து, வெங் கலின மாக் கால்களும் இழந்து, |
| சூர் இழந்து, வன் கவசமும் இழந்து, துப்பு இழந்து, |
| தார் இழந்து, பின் இழந்தனர் நிருதர், தம் தலைகள். |
| |
நிருதர் - அரக்கர்கள்; தேர் இழந்து- (தாம் ஏறி வந்த) தேர்களையும் இழந்து; வெம்சிலைகளும் இழந்து- தாம் பிடித்திருந்த விற்களையும் இழந்து; செந்தறு கண் - சிவந்த கொடிய கண்களுடன் கூடிய; கார் இழந்து - மேகம் போன்ற யானைகளையும் இழந்து; வெம்கலின மாக்கால்களும் இழந்து - கொடிய கடிவாளமுடைய குதிரைகளின் கால்களையும் இழந்து; சூர் இழந்து - சூரத்தனத்தையும் இழந்து; வன் கவசமும் இழந்து - வலிய கவசங்களையும் இழந்து; துப்பிழந்து - வலிமையையும் இழந்து;தார் இழந்து- மாலைகளையும் இழந்து; பின் தம் தலைகள் இழந்தனர்- பிறகு (இறுதியாக) தம்முடைய தலைகளையும் இழந்தழிந்தனர். |
(234) |
| 7251. | அரவ நுண் இடை அரக்கியர்; கணவர்தம் அற்ற, |
| சிரமும் அன்னவை ஆதலின், வேற்றுமை தெரியா, |
| புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்தி, |
| கரவு இல் இன் உயிர் துறந்தனர், கவவுறத் தழுவி. |
| |
அரவ நுண் இடை அரக்கியர்- பாம்பு போன்று நெளியும் நுண்ணிய இடைகளையுடைய அரக்கிமார்கள்; அற்ற தம் கணவர் சிரமும் - உயிரற்று இறந்து போன தம் கணவர்களின் தலையும்; அன்னவை ஆதலின்- குதிரை, யானை போன்ற விலங்குகளின் தலைகளே ஆதலின்; வேற்றுமை தெரியா - தம் கணவர் தலைகட்கும் அவற்றின் தலைகட்குமிடையே வேறுபாடு உணர இயலாமையால்; புரவியின் தலை பூட்கையின் தலை இவை பொருத்தி - குதிரையின் தலைகள், யானையின் தலைகள் |