பக்கம் எண் :

756யுத்த காண்டம் 

முதலியவற்றைத்  தம்  கணவன்  உடலோடு  சேர்த்து வைத்து;
கரவில் - மறைவான  இடத்தில்;கவவு உறத்தழுவி - நன்கு
பொருந்த   அணைத்து;   இன்  உயிர்  துறந்தனர் - தமது
இன்னுயிரினைத் (தழுவியவாறே) இழந்தனர்.
 

அரக்கர்   சிலர்,  யானை,  குதிரை  ஆளி  முதலியவற்றின்
தலைகளைக்  கொண்டிருந்தமையை  வான் மீகமும் புகலும். "கரி,
பரி,  வேங்கை,  மாக்கரடி,  யாளி,  பேய்,  அரி, நரி, நாய், என
அணிமுகத்தினர்"   (கம்ப. 5127)   என்று   முன்பும்   கூறினார். 
"முலையும் முகனும் சேர்த்திக் கொண்டோன் தலையொடு முடியும்
நிலையொடு தொகைஇ"  (தொல். பொருள். 79)  "மண்டு அமருள்
மாறாமைந்தில் கொண்டான் தலையொடு கோல்வளை முடிந்தன்று"
(புறப். வெண். காஞ்.13)  (என   இந்நிகழ்வினைப்   புறப்பொருள்
இலக்கண நூல்கள் புகலும். 
 

(235)
 

7252. 

ஆர்ப்பு அடங்கின, வாய் எலாம்; அழற் கொழுந்து 

ஒழுகும்

பார்ப்பு அடங்கின, கண் எலாம்; பல வகைப் 

படைகள்

தூர்ப்பு அடங்கின, கை எலாம்; தூளியின் படலைப் 

போர்ப்பு அடங்கின உலகு எலாம்; முரசு எலாம்  

போன.

 

முரசு  எலாம்  போன - முரசங்களின்  ஒலிகள் எல்லாம்
போயின; வாய்   எலாம் ஆர்ப்பு அடங்கின - அரக்கரின்
வாய்கள்  எல்லாம் ஆரவாரம் அடங்கின; கண் எலாம் அழல்
கொழுந்து   ஒழுகும்
-  விழிகள்   எல்லாம்   தீக்கொழுந்து
வெளிப்பட; பார்ப்பு அடங்கின - காணும் காட்சியை ஒழிந்தன;
கை  எலாம்  பலவகைப்  படைகள்  தூர்ப்பு அடங்கின
கைகள்  எல்லாம்  பலவிதப்   படைக்கலங்களைப்  பொழிதலை
ஒழிந்தன;   தூளியின்   படலை -  தூசிக்கூட்டங்கள்; உலகு
எலாம் போர்ப்பு அடங்கின
- உலகினையெல்லாம் போர்த்துக்
கொள்வதிலிருந்தும் நீக்கம் பெற்றன. 
 

(236)
 

இராவணன் தனித்து நின்று, பொருதல்
 

7253.

ஒன்று நூற்றினோடு ஆயிரம் கொடுந் தலை உருட்டி, 

சென்று தீர்வு இல, எனைப் பல கோடியும் சிந்தி,