பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 757

நின்ற தேரொடும் இராவணன் ஒருவனும் நிற்க, 

கொன்று வீழ்த்தினது--இராகவன் சரம் எனும்  

கூற்றம்.

 

இராகவன் சரம் எனும் கூற்றம்- இராமபிரானுடைய காலன்
போன்ற அம்பு; ஒன்று  நூற்றினோடு  ஆயிரம் கொடுந்தலை
உருட்டி
- இலட்சம் அரக்கருடைய கொடிய தலைகளை அறுத்து
உருளச் செய்து;சென்று தீர்வில - அதனோடு  முடிந்து விடாமல்;
எனைப்  பல   கோடியும்   சிந்தி - (மற்றும்)   எத்தனையோ
பலகோடி  வீரர்களையும்  அழித்து;  நின்ற தேரொடும் - மீந்து
நின்ற  தேர்  ஒன்றோடும்;  இராவணன்  ஒருவனும்  நிற்க -
இராவணன் ஒருவனும் நிற்க - இராவணன் ஒருவனே மிஞ்சி நிற்க;
கொன்று வீழ்த்தினது - கொன்றழித்தது.
 

 (237)
 

7254.

தேரும் யானையும் புரவியும் அரக்கரும் தெற்றி, 

பேரும் ஓர் இடம் இன்று எனத் திசைதொறும்  

பிறங்கி,

காரும் வானமும் தொடுவன பிணக் குவை  

கண்டான்,--

மூரி வெஞ் சிலை இராவணன்--அரா என  

முனிந்தான்.

 

மூரி வெஞ்சிலை இராவணன் - வலிமை  மிக்க கொடிய
வில்லையுடைய இராவணன்;  தேரும்  யானையும்  புரவியும்
அரக்கரும்
-    தேர்களும்,    யானைகளும்   குதிரைகளும்
இராக்கதரும்; தெற்றி- எங்கும் நெருங்கி  (ஒன்றோடு  ஒன்று
முட்டி);பேரும் ஓர் இடம் இன்றென - நகர்வதற்கு வேறோர்
இடம்   இல்லை   யென்னும்படி;   திசைதொறும் பிறங்கி -
திக்கெல்லாம்  தோன்றுமாறு;  காரும்  வானமும் தொடுவன
பிணக்குவை    கண்டான்
-  மேகத்தையும்  வானத்தையும்
சென்று தொடுமாறு குவிந்த பிணக்குவியல்களைக் கண்டவனாய்;
அரா என முனிந்தான் - பாம்பு போல வெகுண்டான். 
 

(238)
 

7255.

முரண் தொகுஞ் சிலை இமைப்பினில் முறையுற 

வாங்கி, 

புரண்டு தோள் உறப் பொலன் கொள் நாண்

 வலம்படப் போக்கி,