பக்கம் எண் :

758யுத்த காண்டம் 

திரண்ட வாளிகள் சேவகன் மரகதச் சிகரத்து 

இரண்டு தோளினும் இரண்டு புக்கு அழுந்திட,  

எய்தான்.

 

பொலன் கொள் நாண்- அழகைக் கொண்ட வில்லின் நாண்
ஆனது;   புரண்டு தோள் உற - புரண்டு தோளிலே தோயும்படி;
முரண் தொகும்சிலை - வலிமையெல்லாம்  ஒருங்கு  திண்டுள்ள
வில்லினை; இமைப்பினில்  முறை  உறவாங்கி -  இமைக்கும்
நேரத்திலே  முறைப்படி வளைத்து; திரண்ட வாளிகள் இரண்டு-
திரண்டெடுத்த உருவினையுடைய இரண்டு அம்புகளை; வலம்படப்
போக்கி  -  வலிமை   தோன்ற    விடுத்து;  
சேவகன் -
இராமபிரானுடைய; மரகதச்  சிகரத்து  இரண்டு  தோளினும்-
மரகத  மலைச்  சிகரம்  போன்ற  இரண்டு தோள்களிலும்; புக்கு
அழுந்திட எய்தான்
- புதையுமாறு எய்தான். 
 

(239)
 

7256.

முறுவல் எய்திய முகத்தினன், முளரி அம் கண்ணன், 

மறு இலாதது ஓர் வடிக் கணை தொடுத்து, உற  

வாங்கி,

இறுதி எய்தும் நாள், கால் பொர, மந்தரம்  

இடையிட்டு

அறுவது ஆம் என, இராவணன் சிலையினை  

அறுத்தான்.

 

முறுவல் எய்திய முகத்தினன் - புன்முறுவல் பூத்த முக
மலரினையுடையவனாய்;முளரி அம் கண்ணன்- செந்தாமரை
மலரையொத்த  அழகிய  கண்களையுடைய  இராமபிரான்; மறு
இலாதது ஓர் வடிக்கணை தொடுத்து
- குற்றமற்றதோர் கூரிய
அம்பினைப் பூட்டி; உறவாங்கி - (வில்லினை) நன்கு வளைத்து;
இறுதிநாள் கால்பொர-  உகாந்தகாலக்  காற்று வீசும்போது;
மந்தரம்- மந்தரமலை;இடையிட்டு  அறுவது  ஆம் என -
இடையிலே இற்று  ஒடிவது போல;இராவணன் சிலையினை
அறுத்தான்
-    இராவணனுடைய    வில்லினை   அறுத்து
வீழ்த்தினான்.
 

முறுவல் எய்திய முகத்தினனாய் இராமன் நிகழ்த்தியபோர்
"அலகிலா   விளையாட்டு   உடையான்   (கம்ப.1) என்பதன்
அரும்பொருளை உணர்த்தியது. பிராட்டியின் கூற்றிலும், (5188)
இராவணன் மாலியவானிடம் கூறிய கூற்றிலும் (7258) இந்நிலை
அறிக. 

(240)