| 7257. | மாற்று வெஞ் சிலை வாங்கினன், வடிம்புடை |
| நெடுநாண் |
| ஏற்றுறா முனம், இடை அறக் கணைகளால் எய்தான்; |
| காற்றினும் கடிது ஆவன, கதிர் மணி நெடுந் தேர் |
| ஆற்று, கொய் உளைப் புரவியின் சிரங்களும் |
அறுத்தான். |
| |
மாற்று வெஞ்சிலை வாங்கினன் - (மாற்றாக) பிறிதொரு கொடிய வில்லினை வளைத்தவனாய்; வடிம்புடை நெடுநாண்- தழும்பினைத் தரவல்ல நீண்ட நாணினை; ஏற்றுறா முன்னம்- (இராவணன்) ஏற்றுவதற்கு முன்பாக; இடையறக் கணைகளால் எய்தான்- (இராமபிரான் இராவணனின் வில்லானது) நடுவிலே முறிந்து போம்படி அம்புகளால் அடித்தான்;காற்றினும் கடிது ஆவன - (மேலும்) காற்றிலும் வேகமாகச் செல்வனவும்; கதிர்மணி நெடுந்தேர் - ஒளிமிக்க மாணிக்கங்கள் பதித்துச் செய்யப் பெற்றவையுமான பெரிய தேரினை; ஆற்று- சுமந்து ஓடுபவையுமான; கொய்உளைப் புரவியின் சிரங்களும் அறுத்தான்- கொய்யப்பெற்ற பிடரிகளையுடைய (தேர்க்) குதிரைகளின் தலைகளையும் அறுத்தெறிந்தான் (பெருமான்). |
(241) |
| 7258. | மற்றும் வெம் படை வாங்கினன் வழங்குறாமுன்னம், |
| இற்று அவிந்துக எரி கணை இடை அற எய்தான்; |
| கொற்ற வெண்குடை கொடியொடும் துணிபடக் |
| குறைத்தான்; |
| கற்றை அம் சுடர்க் கவசமும் கட்டு அறக் கழித்தான். |
| |
மற்றும்- மேலும்; வெம்படை வாங்கினன்- (இராவணன்) (வேறொரு) கொடிய ஆயுதம் எடுத்து; வழங்குறா முன்னம்- விடுதற்கு முன்பேயே; இற்று இடையற அவிந்து உக - அது இடையிலேயே முழுதும் சிதைந்து விழுமாறு; எரிகணை எய்தான்- எரிகின்ற அம்பு ஒன்றினை (இராமபிரான்) எய்தான்; கொற்ற வெண்குடை- (மேலும் அம்புகளால்) வெற்றிக் குடை; கொடியொடும் துணிபட - (தன்) கொடியோடு துண்டிக்குமாறு; குறைத்தான் - வெட்டினான்; கற்றை அம் சுடர்க் கவசமும் - அழகிய ஒளிமிக உமிழும் கவசத்தையும்; கட்டு அற அழித்தான்- பூட்டு அற்று விழுமாறு சிதைத்தான்.
|
(242) |