| 7259. | மாற்றுத் தேர் அவண் வந்தன வந்தன வாரா, |
| வீற்று வீற்று உக, வெயில் உமிழ் கடுங் கணை |
| விட்டான்; |
| சேற்றுச் செம் புனல் படு களப் பரப்பிடைச் செங் |
| கண் |
| கூற்றும் கை எடுத்து ஆடிட, இராவணன் |
கொதித்தான்.* |
| |
அவண் - அவ்விடத்து; மாற்றுத்தேர் வாரா வந்தன வந்தன - (வெவ்வேறு) மாற்றுத் தேர்கள் வாராமல் வருந்தோறும் வருந்தோறும்; வீற்று வீற்றுக - (அவை) துண்டு துண்டாகச் சிதறி விழ; வெயில் உமிழ் கடுங்கணை விட்டான் - ஒளிவிடும் கொடுங்கணைகளைச் செலுத்தினான் (பெருமான்); சேறு செம்புனல் - சேறாகிய குருதிப் புனலைக் கொண்ட; படுகளப் பரப்பிடை- போர்க்களப் பரப்பின் இடையே; செங்கண் கூற்றும் - (சினத்தினாலே) சிவந்த கண்களையுடைய யமனும்; கை எடுத்து ஆடிட - (மகிழ்ச்சியால்) கரங்களை உயர்த்திக் கூத்தாட; இராவணன் கொதித்தான் - (அது கண்டு பொறாமல்) இராவணன் (சினத்தால்) மனம் கொதித்தான். |
(243) |
| 7260. | மின்னும் பல் மணி மவுலிமேல் ஒரு கணை |
| விட்டான்; |
| அன்ன காய் கதிர் இரவிமேல் பாய்ந்த போர் |
| அனுமன் |
| என்னல் ஆயது ஓர் விசையினின் சென்று, அவன் |
| தலையில் |
| பொன்னின் மா மணி மகுடத்தைப் புணரியில் |
வீழ்த்த, |
| |
மின்னும் பன்மணி பவுலிமேல் - ஒளிர்கின்ற பலமணிகள் பதித்த மகுடத்தின் மீது; ஒருகணை விட்டான்- ஓர் அம்பினை விடுத்தான்; அன்ன - அந்த அம்பு; காய்கதிர் இரவி மேல் பாய்ந்த போர் அனுமன் என்னல் ஆயது - வெய்யகிரணங்களையுடைய சூரியன் மீது தாவிச் சென்ற போர்த்திறம் மிக்க அனுமன் என்று கூறுமாறு; ஓர் விசையினில் சென்று - ஒப்பற்ற வேகத்தில் சென்று;அவன் தலையில் - அவனுடைய தலைமீதிருந்த; பொன்னின் |