பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 761

மாமணி  மகுடத்தை- பொன்னில் செய்து பெருமைக்குரிய
நவமணிகள் பதிக்கப் பெற்ற கிரீடத்தை; புணரியில் வீழ்த்த
- கடலிடை வீழ்த்தவே. (அடுத்த பாட்டில் தொடரும்). 
 

(244)
 

7261.

செறிந்த பல் மணிப் பெருவனம் திசை பரந்து எரிய, 

பொறிந்தவாய், வயக் கடுஞ் சுடர்க் கணை படும் 

பொழுதின்,

எறிந்த கால் பொர, மேருவின் கொடு முடி இடிந்து, 

மறிந்து வீழ்ந்ததும் ஒத்தது, அவ் அரக்கன்தன்  

மகுடம்.

 

வயக்    கடுஞ்    சுடர்க்கணை படும் பொழுதின் -
வெற்றிக்குரிய   கடிய   ஒளிவீசும்  இராமபிரானுடைய  அம்பு
பட்டபொழுது;  செறிந்த  பன்மணி -  (மகுடத்தில்)  பதிக்கப்
பெற்றிருந்த  பல   மாணிக்கங்கள்;   பெருவனம்- (என்னும்)
பெருந்திரள்; பொறிந்த வாய் திசை பரந்து எரிய - திசைகள்
தோறும்   பரவி   எரிவது   போன்று ஒளிசிந்தி வீழ்ந்தனவாக;
எறிந்தகால்   பொர  -  வீசியடித்த   வாயு   மோதியபோது;
மேருவின் கொடுமுடி - மேரு மலையின் உயர்ந்த சிகரமானது;
இடிந்து   மறிந்து  வீழ்ந்ததும் ஒத்தது - உடைந்து மடங்கி
(கடலில்)   விழுந்ததையும்   போன்றது;  அவ்வரக்கன்  தன்
மகுடம்
- அந்த இராவணனுடைய மகுடம்.
 

வாயுவுக்கும்   மேருமலைக்கும்  இடையே  நிகழ்ந்த பலப்
போட்டியில்,   வாயு,   மேருவின்  ஒரு  சிகரத்தைப் பிய்த்துக்
கடலில்  எறிந்தது.  அதுவே இலங்கையாயிற்று என்பது புராண
மரபு.  ஆதலின்,  இராவணன்  மகுடம்  கடலில் வீழ்ந்ததற்கு,
மேருவின்  சிகரம்  கடலில்  வீழ்ந்ததனை  உவமையாக்கினார்.
இதனை (கம்ப. 4763) கடல் தாவு படலத்தும் குறித்தார்.
 

(245)
 

7262. 

அண்டர் நாயகன் அடு சிலை உதைத்த பேர் அம்பு 

கொண்டு போகப் போய்க் குரை கடல் குளித்த அக் 

கொள்கை,

மண்டலம் தொடர் வயங்கு வெங் கதிரவன், தன்னை 

உண்ட கோளொடும், ஒலி கடல் வீழ்ந்ததும் ஒக்கும். 

 

அண்டர் நாயகன் - தேவர் கோனாகிய இராமபிரானுடைய;
அடுசிலை   உதைத்த பேர்  அம்பு - கொல்லும் வில்லானது
விடுத்த  பெருமைக்குரிய  இராம  பாணம்; கொண்டு போகப்
போய்
- உந்திச்