சென்றதனால் சென்று; குரை கடல் குளித்த அக்கொள்கை - (அம்மகுடம்) ஒலிக்கும் கடலில் அழுந்திய அத்தன்மை; மண்டலம் தொடர் - வட்ட வடிவம் பொருந்திய; வயங்கு வெங்கதிரவன்- ஒளிமிகும் வெய்ய கதிர்களையுடைய சூரியன்; தன்னை உண்ட - தன்னை விழுங்கிய; கோளொடும் ஒலிகடல் வீழ்ந்ததும் ஒக்கும்- கேது என்னும் கோளோடு ஒலி கடலில் வீழ்ந்ததையும் ஒக்கும். |
சூரியன் கிரகணம் பற்றிய நிலையில் கடலிடை மறைவதும் உண்டாதலின், இராமபாணம் தூக்கிச் சென்ற இராவணன் மகுடம் கடலில் வீழ்ந்து மறைவது அதற்கு உவமையாயிற்று. இராவணன் மகுடம் சூரியனுக்கும், இராம சரம் கேது எனும் செம்பாம்பிற்கும் உவமைகள் ஆயின. தற்குறிப்பேற்ற அணி. |
(246) |
இராவணன் மகுடம் இழந்து நாணி நிற்றல் |
| 7263. | சொல்லும் அத்தனை அளவையில் மணி முடி |
| துறந்தான்; |
| எல் இமைத்து எழு மதியமும் ஞாயிறும் இழந்த |
| அல்லும் ஒத்தனன்; பகலும் ஒத்தனன்; அமர் |
| பொருமேல், |
| வெல்லும் அத்தனை அல்லது, தோற்றிலா விறலோன். |
| |
அமர் பொருமேல் - போரிட்டான் என்றால்; வெல்லும் அத்தனை அல்லது- வெல்லுமளவே அன்றி; தோற்றிலா விறலோன் - தோல்வியையே யறியாத வலியோனாகிய இராவணன்; சொல்லும் அத்தனை அளவையின் - சொல்லும் பொழுதிற்குள்; மணி முடி துறந்தான்- (தன்) மணி மகுடங்களை (இராமசரத்தால்) இழந்து போனான்; எல் இமைத்து எழு மதியமும்- ஒளி உமிழ்ந்து எழுகின்ற சந்திரனையும்; ஞாயிறும்- சூரியனையும்; இழந்த - முறையே இழக்கப் பெற்ற; அல்லும் ஒத்தனன் பகலும் ஒத்தனன்- இரவினையும் பகலினையும் நிகர்த்து விளங்கினான். |
(247) |
| 7264. | மாற்ற அருந் தட மணி முடி இழந்த வாள் |
| அரக்கன்,-- |
| ஏற்றம் எவ் உலகத்தினும் உயர்ந்துளன்எனினும், |
| ஆற்றல் நல் நெடுங் கவிஞன் ஓர் அங்கதம் உரைப்ப, |
| போற்ற அரும் புகழ் இழந்த பேர் ஒருவனும்-- |
| போன்றான். |