மாற்றருந் தடமணிமுடி - ஒப்பு உரைக்க இயலாத பெரிய மணிகள் பதித்த மகுடத்தை; இழந்த வாள் அரக்கன் - (இராமன் அம்பால் இமைப்பொழுதில்) இழந்து விட்ட இராவணன்; ஏற்றம் எவ்வுலகத்தினும் உயர்ந்துளன் எனினும் - பெருமையால் எல்லா உலகங்களிலும் மேம்பட்டுள்ளான் என்றாலும்; ஆற்றல் நல் நெடுங்கவிஞன் - (வாழ்வுறவும் தாழ்வுறவும் செய்விக்க வல்ல) ஆற்றல் சான்ற நற்பெருங் கவிஞன் ஒருவன்; ஓர் அங்கதம் உரைப்ப - ஓர் அங்கதச் செய்யுளை உரைத்தவுடன்; போற்ற அரும் புகழ் இழந்த - போற்றுதற்கு அரிய போர்க்குரிய புகழ் அனைத்தையும் இழந்துவிட்ட; ஒருவனும் போன்றான் - ஒருவனைப் போலவும் ஆனான். |
அங்கதம் - வசைப் பாட்டு. அதில் வல்லவர்களை ஆற்றல் நெடுங்கவிஞன் என்றார். "அங்கதந்தானே அரில்தவத் தெரியின் செம்பொருள் பழிகரப்பு என இருவகைத்தே" (தொல். செய்: 124) "செம்பொருளாயின வசையெனப்படுமே" (தொல். செய்.125); மொழி கரந்து சொல்லின் அது பழிகரப்பாகும் (தொல். சொல்.126) என வரும் தொல்காப்பிய நூற்பாக்களாலும் அவற்றின் உரைகளாலும் அங்கதம் பற்றிய விளக்கம் அறியலாம். "ஏந்திய கொள்கையார் சீறின் இடை முறிந்து வேந்தனும் வெந்து கெடும்" (குறள். 899) எனும் வள்ளுவர் வாய் மொழியினையும் அதற்குப் பரிமேலழகர் உரையினையும் உணர்க. "நந்திகலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்" (தனிப்பாடல்) என்பதும் இங்கு உணர்தற்பாலது. மணி மகுடம் பறி போன இராவணன் அங்கதப் பாடலால் புகழ் அழிந்த ஒருவனை ஒத்திருந்தான். உவமை அணி. |
(248) |
| 7265. | 'அறம் கடந்தவர் செயல் இது' என்று, உலகு எலாம் |
| ஆர்ப்ப, |
| நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட, நின்றான்-- |
| இறங்கு கண்ணினன், எல் அழி முகத்தினன், |
| தலையன், |
| வெறுங் கை நாற்றினன், விழுதுடை ஆல் அன்ன |
மெய்யன். |
| |
இறங்கு கண்ணினன் தலையன் - (மணிமுடியோடு செருக்கனைத்தும் இழந்ததனால்) கீழ்நோக்கிய பார்வையினையும் தலையினையும் உடையவனும்; எல் அழி முகத்தினன் - ஒளியிழந்த முகத்தினையுடையவனும்; வெறுங்கை நாற்றினன் - (கருவிகள் இழந்த) கைகளைத் தொங்க விட்டவனும்; விழுதுடை ஆல் அன்ன |