பக்கம் எண் :

764யுத்த காண்டம் 

மெய்யன்-  (அதனால்) விழுது தொங்குகின்ற ஆலமரம் போன்ற
மேனியினையுடையவனுமான   இராவணன்;  'அறம்  கடந்தவர்
செயல் இது'  என்று  உலகு எலாம் ஆர்ப்ப
- அறத்தினை
மீறிய  தீயோர்களின்  செயல்கள்  இப்படித்தான் முடியும் என்று
உலகில்  உள்ளோர்   எல்லோரும் ஆரவாரமிட்டுக்கூற; நிறம்
கரிந்திட
- தன் நிறம் (பொலிவிழந்து)  கரிந்து   போக; விரல்
நிலம்  கிளைத்திட நின்றான்
- கால் விரல்களால் நிலத்தைக்
கிளறிய வண்ணம் நின்றான்.
 

தோற்று  நாணி  நிற்கும்  ஒரு  பெருவீரனின் தோற்றத்தை
அவ்வந்நிலைகட்கேற்ற    மெய்ப்பாடுகளுடன்      இப்பாடல்
காட்டுகிறது.  பத்து  முகங்களிலும் ஒளி இழந்ததால் 'எல் அழி
முகத்தினன்'   என்றும்   ஆயுதங்கள்  இழந்ததால் வெறுங்கை
நாற்றினன்'   என்றும்   உரைத்தார்.   ஆயுதமின்றிக்   கைகள்
இருபதும்   தொங்கிக்   கிடக்கும்  தோற்றம் 'விழுதுடை ஆல்
அன்ன மெய்யன்'  ஆயிற்று.  அறங்கடை  நின்றாருள் எல்லாம்
பிறன்கடை  நின்றாருள்  பேதையார்  இல் (குறள். 142) என்பது
அறநூல் கூற்றாதலின் முன்னர் இதனைக் கூற அஞ்சிய உலகம்
இப்போது  துணிந்து கூறியதால், 'அறங்கடந்தவன் செயல் இது'
என்று உலகெலாம் ஆர்ப்ப என்றார். 
 

(249)
 

இராமன் அறிவுரை கூறி, 'இன்று போய், நாளை வா' எனல்
 

7266.

நின்றவன் நிலை நோக்கிய நெடுந்தகை, இவனைக் 

கொன்றல் உன்னிலன், 'வெறுங் கை நின்றான்' 

எனக் கொள்ளா;

'இன்று அவிந்தது போலும், உன் தீமை' என்று,  

இசையோடு

ஒன்ற வந்தன வாசகம் இனையன உரைத்தான்: 

 

நின்றவன்   நிலை  நோக்கிய  நெடுந்தகை- (நிலம்
கிளைத்து  நின்றவனாகிய)  இராவணனது (அவல) நிலையினைக்
கண்ணுற்ற  பெரும்பண்பினனாகிய  இராமபிரான்; வெறுங்கை
நின்றான்
- (கருவி ஏதுமின்றி)  வெறுங்கையோடு நிற்கின்றான்;
எனக்  கொள்ளா - என்று   மனத்துட்கொண்டு;  இவனைக்
கொன்றல் உன்னிலன்
- இவனைக் கொல்ல நினையாதவனாய்;
இன்று உன் தீமை அவிந்தது போலும்
- இன்றோடு உன் தீய
செயல்கள்  அழிந்துவிட்டன  போலும்; என்று இசையோடு -
என்று (உலகு உள்ளளவும் நிற்கும்)  புகழோடு; ஒன்ற வந்தன
வாசகம் இனையன