உரைத்தான்- பொருந்த வந்தவையான இவ்வாசகங்களை உரைப்பான் ஆயினான். |
கொல்லல் என்பது செய்யுள் ஆதலின் எதுகை நோக்கிக் கொன்றல் என வந்தது. நிராயுதனாய் நிற்பவன் பகைவனே யாயினும் இரக்கத்திற்குரியவன் என நினைந்ததால் இராமனை "நெடுந்தகை" என்றழைத்து மகிழ்கிறார். தாடகை பெண் எனக் கண்டு, கொல்லத் தயங்கிய போது, "பெண் என மனத்திடைப் பெருந்தகை நினைத்தான்' (கம்ப. 374) என்றதும் காண்க. இராவணன் உள்ளத்தில் பாவத்தீயாகிய காமத்தீ ஆணவத்தீ முதலிய தீக்கள் எரிந்து கொண்டிருந்தனவாதலின், "இன்று அவிந்தது போலும் உன் தீமை?" என்று பெருமான் அழகுறக் கேட்டான். |
(250) |
| 7267. | 'அறத்தினால் அன்றி, அமரர்க்கும் அருஞ் சமம் |
| கடத்தல் |
| மறத்தினால் அரிது என்பது மனத்திடை வலித்தி; |
| பறத்தி, நின் நெடும் பதி புகக் கிளையொடும்; பாவி! |
| இறத்தி; யான் அது நினைக்கிலென், தனிமை |
கண்டு இரங்கி. |
| |
அறத்தினால் அன்றி - (இராமபிரான் இராவணனை நோக்கி) அறநெறியினால் அல்லாமல்; மறத்தினால்- பாவ நெறியினால்; அருஞ்சமர் கடத்தல்- அரிய போர்களில் வெல்லுதல்; அமரர்க்கும் அரிது - தேவர்களுக்கும் இயலாததாகும்; என்பது - என்பதனை; மனத்திடை வலித்தி - உள்ளத்திலே உறுதியாகப் பதித்துக் கொள்க; பாவி! - பாவச் செயல்கள் புரிந்தவனே!; கிளையொடும் நின் நெடும் பதிபுக - உன் சுற்றத்தாரொடும் பெரிய ஊருக்குட் செல்ல; பறத்தி - விரைகிறாய்; இறத்தி - நீ இப்போது இறப்பாய்; தனிமை கண்டிரங்கி யான் அது நினைக்கிலென்- நிராயுதபாணியாக நிற்கும் அவலம் கண்டு இரங்கி உன்னைக் கொல்வதனை நான் நினைக்க வில்லை. |
எதிரிக்கு ஒரு துன்பம் வந்தவிடத்து, தக்க சமயம் வந்தது என்று அவனைக் கொல்லாது உபகாரம் செய்து உயிருடன் அனுப்புதல் பேராண்மை என்பதாகும். "பேராண்மை என்பதறுகண் ஒன்று உற்றக்கால், ஊராண்மை மற்றதன் எஃகு" என்ற குறளும் (773) அதற்குப் பரிமேலழகர் எழுதிய உரையும் இங்கும் பின்னும் (7271) நினைக. |
(251) |