| 7268. | 'உடைப் பெருங் குலத்தினரொடும், உறவொடும், | | உதவும் | | படைக்கலங்களும், மற்றும் நீ தேடிய பலவும், | | அடைத்து வைத்தன திறந்துகொண்டு | | ஆற்றுதிஆயின், | | கிடைத்தி; அல்லையேல், ஒளித்தியால்; சிறு தொழில் | கீழோய்! | | | சிறுதொழில் கீழோய் - இழிசெயல்கள் புரியும் கீழ்மகனே!; உடைப் பெருங் குலத்தினரொடும் - உன்னுடைய பேரினத்தவ ரோடும்; உறவொடும் - சுற்றத்தாரோடும்; உதவும் படைக்கலங்களும் - (உனக்கு இனி) உதவவல்ல படைக்கருவிகளையும்; மற்றும் நீ தேடிய பலவும் - மற்றும் நீ தேடிப் பல இடங்களில் வைத்துள்ள சேனைகளையும்; அடைத்து வைத்தன திறந்து கொண்டு - நகரின் உள்ளே அடக்கி வைத்துள்ள உன் பலப்பொருள்கள் யாவற்றையும் திறந்து கூட்டிக்கொண்டு; ஆற்றுதியாயின் - போர் புரியும் ஆற்றல் உடையவன் நீயானால்; கிடைத்தி - (போர்க்கு வந்து) கிட்டுவாயாக; அல்லையேல் ஒளித்தி - உனக்கு அந்த ஆற்றல் இல்லையாயின் கோட்டைக்குள் ஒளிந்து கொள்; (என்றான் இராமபிரான்). | பிறர் மனை நயத்தல் முதலிய புன் செயல் புரிந்தமையால் இராவணனை, சிறு தொழிற் கீழோய்! என்றார். "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை; இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி" (குறள். 137) என்பர் வள்ளுவப் பெருந்தகை. "அறவையாயின் நினது எனத்திறத்தல்; மறவையாயின் போரொடு திறத்தல்" (புறம். 44) என்னும் புறப்பாடல் அடிகள் கவிஞர்க்கு இங்கு நினைவு வந்திருத்தல் வேண்டும் குலத்தினர்-அரக்க இனத்தினர். உறவு-தம்பி, மக்கள் முதலியோர்; படைக்கலங்கள் - வில், வேல், ஈட்டி, தோமரம் முதலியவை. மற்றும் நீ தேடிய பலவும் என்றது - தேர் முதலிய நால்வகைப் படைகளையும் மூலபலப் படை முதலியவற்றையும், "ஆற்றுதியாயின் கிடைத்தி; அல்லையேல் ஒளித்தி" - சந்த நயம் சுவைத்து மகிழ்க. தறுகண்மை, இசைமை அடியாகப் பிறந்த பெருமிதத்தைச் சார்ந்தன இராமனது உரைகள். | (252) | | 7269. | 'சிறையில் வைத்தவள்தன்னை விட்டு, உலகினில் | | தேவர் | | முறையில் வைத்து, நின் தம்பியை இராக்கதர் முதல் | | பேர் |
|
|
|