பக்கம் எண் :

 முதற் போர் புரி படலம் 767

இறையில் வைத்து, அவற்கு ஏவல் செய்து

இருத்தியேல், இன்னும்,

தறையில் வைக்கிலென், நின் தலை வாளியின் 

தடிந்து.

 

சிறையில்  வைத்தவள் தன்னை விட்டு- உன்னால் சிறை
வைக்கப்பட்டுள்ள   சீதாதேவியினை   விடுதலை  செய்து;  நின்
தம்பியை 
-  உனக்குப்  பின் பிறந்தவனான  தம்பி வீடணனை;
உலகினில்  தேவர்  முறையில்  வைத்து -  உலகின்  கண்
தேவராகிய  அந்தணர்  தகுதியில்  வைத்து; இராக்கதர் முதல்
பேர்  இறையில்  வைத்து 
-  இராக்கதர்க்கு  முதல்வனாகும்
பேரரசப்   பதவியில்   வைத்து;   அவற்கு   ஏவல்  செய்து
இருத்தியேல்
   -    அவ்வீடணனுக்கு   ஏவல்    பணிபுரிந்து
இருப்பாயானால்; இன்னும் - (இப்போது மட்டுமன்றி) இனிமேலும்;
நின்தலை வாளியின் தடிந்து -  உன்னுடைய  தலையை (என்)
அம்பால் துண்டித்து; தரையில் வைக்கிலென் - தரையின் மேல்
வைக்க மாட்டேன்.
 

இதுவும் தறுகண்மையால் வந்த பெருமிதம். உலகினில் தேவர்
- பூசுரர் எனப்படும் அந்தணர். 
 

(253)
 

7270.

'அல்லையாம்எனின், ஆர் அமர் ஏற்று நின்று ஆற்ற 
வல்லையாம்எனின், உனக்கு உள வலி எலாம் 

கொண்டு,

"நில், ஐயா!" என நேர் நின்று பொன்றுதிஎனினும்,
நல்லை ஆகுதி; "பிழைப்பு இனி உண்டு" என 

நயவேல்.

 

அல்லையாம் எனின்- (நான் மேலே கூறிய வண்ணம் செய்ய)
விரும்பவில்லையெனில்; ஆர் அமர் ஏற்று நின்று- அரிய போரை
மேற்கொண்டு;    ஆற்றவல்லையாம்    எனில்  -  போர்புரிய
வல்லமையுடையாய் என்றால்; உனக்கு உள வலி எலாம் கொண்டு
- உனக்கு உள்ள ஆற்றல் அனைத்தையும் மேற்கொண்டு; நில் ஐயா
என
- 'எதிர்த்து  நில் ஐயா'  என்று (என்னிடம்) கூறி;  நேர்நின்று
பொன்றுதி
-  என்  எதிரே நின்று போரிட்டு ஒழிவாயாக; எனினும்
- அவ்வாறு  போரிட்டு  ஒழிந்தாய்  ஆயினும்;  நல்லை ஆகுதி -
நல்லவன்  ஆவாய்; இனிப்  பிழைப்பு உண்டு என நயவேல் -
(ஆனால்)  இனி,  (போர்புரிந்து)  பிழைத்துக்  கொள்ளலாம்  என்று
மட்டும் விரும்பி நில்லாதே.